மோடியிடம் கற்ற 2 பாடங்கள் : ராகுல்

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
04 July26 Rahul Gandhi - 2026
File picture

பிரதமர் மோடியிடமிருந்து இரண்டு பாடங்களை கற்றுக் கொண்டேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்!

பிரதமர் மோடி தமக்கு இரண்டு பாடங்களைக் கற்றுக் கொடுத்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் பாஜகவை விட கூடுதலான வாக்குகள் பெற்று முன்னிலை வகித்த நிலையில் தமது வாழ்க்கையின் மிகச்சிறந்த தருணம் இது என்று மகிழ்ச்சி தெரிவித்தார்.

தேர்தல்கள் மூலம் தாம் நிறைய பாடங்களைக் கற்றுக் கொண்டிருப்பதாக கூறிய ராகுல் காந்தி, மக்களின் உணர்வைப் புரிந்துக் கொள்வதுதான் அதில் முதன்மையான பாடம் என்றார்.

இரண்டாவது அந்த உணர்வை பின்பற்றியே அடுத்து நாம் செயல்பட வேண்டும். இந்த இரண்டு பாடங்களையும் தாம் பிரதமர் மோடியிடமிருந்தே கற்றுக் கொண்டதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

மோடி மக்களின் இதயத்துடிப்பை கேட்கவில்லை என்றும் நாட்டை வழிநடத்த அவருக்கு வழங்கப்பட்ட மகத்தான வாய்ப்பை தவறாகப் பயன்படுத்திக் கொண்டார் என்றும் ராகுல்காந்தி விமர்சித்தார்.

1 thought on “மோடியிடம் கற்ற 2 பாடங்கள் : ராகுல்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.