நடந்து வந்தாலே வெற்றிதான்! பறந்து வேறு வந்திருக்கிறார்..!

நடந்து வந்தாலே வெற்றியை தருபவர் அமித்ஷா; தற்போது அவர் பறந்து வந்துள்ளார், வெற்றி நிச்சயம் என்று பேசினார் தமிழக பாஜக., தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் பாஜக., சார்பில் போட்டியிடும் தமிழிசை சௌந்தர்ராஜன், சங்கரப்பேரியில் அதிமுக-பாஜக கூட்டணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், அமித் ஷா நடந்து வந்தாலே வெற்றிதான், அவர் தற்போது பறந்து வேறு வந்திருக்கிறார். எனவே வெற்றி உறுதி என்றார்.

மேலும், தூத்துக்குடி கடலிலும் தாமரை மலரும்; எந்த தியாகம் செய்தாவது வெற்றி பெறுவோம் என்று சூளுரைத்தார் தமிழிசை சௌந்தர்ராஜன். 

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...