தமிழக மக்களையும் குழப்புவதற்காக திமுகவினர் தவறான பிரச்சாரம் செய்வதாக ஈரோடு தொகுதி அமமுக வேட்பாளர் செந்தில்குமாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணைப்பொதுச் செயலாளர் தினகரன் தெரிவித்தார்.
அப்போது பேசிய அவர், 18 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக 8 தொகுதிகளில் வெற்றி பெறவில்லை என்றால், எடப்பாடி தலைமையிலான அரசு கவிழ்ந்துவிடும் என்று கூறினார்.
மத்திய அரசின் கைக்கூலியாக மாநில அரசு செயல்பட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டிய தினகரன், ஜெயலலிதாவை எதிர்த்தவர்கள், அவருக்கு நினைவு மண்டபம் கட்டக்கூடாது என நீதிமன்றம் சென்றவர்களுடன் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி வைத்துள்ளதாகச் சாடினார். இதன் மூலம் ஜெயலலிதாவுக்கு எடப்பாடி துரோகம் செய்துள்ளதாகக் கூறிய தினகரன், இந்த துரோகிகளின் ஆட்சி முடிவுக்கு வரவேண்டும் என்றும் தெரிவித்தார்.




