
புதுக்கோட்டையில் ஸ்ரீபிரகதாம்பாள் ஆராதனை விழா; பார்வையாளர்களை கவர்ந்த சிறுவர்கள் சிறுமிகளின் இசை!
புதுக்கோட்டை பிரகதாம்பாள் கோவிலில் இசை விழா நடைபெற்றது புதுக்கோட்டை திருக்கோகர்ணம் அருள்மிகு பிரகதாம்பாள் கோகர்னேஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ பிரகதாம்பாள் ஆராதனை விழா திருச்சி முன்னாள் மேயர் சாரு பாலா தொண்டைமான் தலைமையில் நடைபெற்றது
பூஜாலயகண்ணன் குழுவினரின் வாய்ப்பாட்டு பானுமதி சுப்பிரமணியனின் வாய்ப்பாட்டு அருணா ராஜகோபாலின்கீபோர்டு ஸ்ரீ ஹரிமோகனின் பக்தி பாடல்கள் அகரம் அபிதேவகி சத்தியபாலன் இசை குடும்பத்தை சேர்ந்த நாராயணசாமி என்ற ரவீந்திரன் வீணையும் ஆகியோரின் குரல் இசையில் ஆராதனை விழாநடந்தது
நிகழ்வில் அசத்திய சிறுவர்கள் சிறுமிகள் ,சிறுவன் கிருத்திக்ஹரிஷின் ஹித்தார் வாசிப்பும் 3 வயது சாய்சிவாவின் மிருதங்கம் இசையும் பார்வையாளர்களை மிகவும் கவர்ந்திருந்தது பிரகதாம்பாள் ஆராதனை விழா நடைபெற்றது புதுக்கோட்டை இசைக் கலைஞர்கள் தங்கள் இசை நிகழ்ச்சியை நடத்தினர் இசை கச்சேரியில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு இசை பள்ளி ஆசிரியர்களும் விழா குழுவினர் சிறப்பு செய்தனர்
விழாவில் தயானந்த சந்திரசேகர் , டாக்டர் ராமதாஸ் வீணை இசை கலைஞர் சந்திரசேகர் ,அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் சத்தியராம்ராமுகண்ணு மருத்துவர் ராமமூர்த்தி ,கம்பன்கழகம்சம்பத் குமார் பழனியப்பா நகர் முரளி சமூகஆர்வலர்கள் இசைவல்லுனர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை டாக்டர் ராமதாஸ் தலைமையில் பழனியப்பா நகர் முரளி பேராசிரியர் காயத்திரிதேவி உள்ளிட்ட பலரும் செய்திருந்தனர்.
- செய்தி: டீலக்ஸ் சேகர், புதுக்கோட்டை