தனியாக ரோந்து செல்லாதீர்கள் என்று பீட் போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திருச்சி அரியமங்கலத்தில் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணிபுரிந்து வரும் ஹரிஹரன் என்பவர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பூக்கடை பகுதியில் போதையில் தகராறு செய்த இஸ்மாயில் என்பவரை கண்டித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த இஸ்மாயில் மீன் வெட்டும் கத்தியால் ஹரிஹரனை வெட்டி அதில் அவர் படுகாயம் அடைந்தார். இதன் பின்னர் இஸ்மாயில் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தின் எதிரொலியாக பீட் போலீசார் யாரும் தனியாக ரோந்துக்கு செல்ல வேண்டாம் என்று மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது தனியாக சென்றதால் தான் ஹரிஹரன் வெட்டப்பட்டார். அதனால் அவரால் அப்போது தடுக்க முடியவில்லை. அதே போன்று தகராறு நடைபெறும் இடங்களில் போலீசாரை அங்குள்ளவர்கள் எளிதாகத் தாக்கி விடுகின்றனர்.

திருச்சி போலீஸ் ஏட்டை பட்டப்பகலில் அரிவாளால் வெட்டிய ரவுடி இஸ்மாயில், பாத்ரூமில் வழுக்கி விழுந்து…

எனவே, இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் பீட் போலீசார் யாரும் தனியாக ரோந்துப் பணிக்கு செல்ல வேண்டாம்; இரண்டு போலீசாராக இணைந்து ரோந்துப் பணிக்குச் செல்ல வேண்டும் என்று ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார் என்றனர்.

இருப்பினும், இந்த அளவுக்கு போலீசாரை தாக்கும் அளவுக்கு தைரியம் எதனால் வந்தது? அதைக் கண்டுபிடித்து, களை எடுங்கள் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுவாக, யாராவது காவலர்களைத் தாக்கினால் பதிலடி பயங்கரமாக இருக்கும் ஆனால், காவலர்களைத் தாக்கியவர்களை மதம் பார்த்து பதில் நடவடிக்கை இருக்கிறது; தாக்குபவரின் மதத்தைப் பொருத்து, மென்மையாகவும், வன்மையாகவும் போலீஸார் நடவடிக்கை எடுக்கின்றனர். சில நேரம், போலீஸ் உயர் அதிகாரிகளே கூட குறிப்பிட்ட மதத்தினர் பகுதி என்றால், போலீஸாரை ரோந்துப் பணிக்கே செல்ல விடுவதில்லை. அதனால் தான் பயங்கரவாதிகள் நடமாட்டம் அந்தப் பகுதிகளில் அதிகரித்து, அவர்களைப் பிடிக்கவும் விசாரிக்கவும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வரவேண்டியிருக்கிறது. இவ்வாறு நடப்பது, உள்ளூர் போலீஸாருக்கு அவமானம் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

போலீஸாரை அச்சமூட்டுவதற்கென்றே, குறிப்பிட்ட மதத்தினர் இவ்வாறு அதிக அளவில் போலீஸாரை தாக்குவதும், தட்டிக் கேட்டால் அல்லது விசாரணைக்கு அழைத்தால் ஊரே திரண்டு வந்து போலீஸ் ஸ்டேஷனையே சூறையாடுவதும் மிரட்டுவதுமாக ரவுடித் தனம் செய்து வருகின்றனர் என்று குற்றம் சாட்டுகின்றனர். அந்த வெளிப்பாடுதான், ஆணையரின் இந்த அறிவுறுத்தல் என்றும், இது போல் போலீஸாரை தாக்குபவர்கள் மீது ஊர் அறிய கடும் தண்டனை கொடுத்திருந்தால், அல்லது கொடுக்கப் பட்டால் இவ்வாறு ரவுடித் தனம் செய்ய அச்சப் பட்டிருப்பார்கள் என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.
Loading...