ஜெ., நினைவு நாள்… ஊடகங்களுக்கு கட்டுப்பாடு விதித்தது ஆறுமுகசாமி ஆணையம்

சென்னை: ஜெயலலிதா நினைவு நாளை ஒட்டி சர்ச்சைக்குரிய விதத்தில் கருத்துகளை ஊடகங்களில் வெளியிடக் கூடாது என ஆறுமுகசாமி ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

இது தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் வெளியிட்ட அறிக்கை:

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஏதேனும் ஆவணங்கள், ஆதாரங்கள் இருந்தால் ஆணையத்தின் முன் சமர்ப்பிக்க வேண்டும்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சர்ச்சைக்குரிய விதத்தில் செய்தியோ, தொடரோ அல்லது விவாத நிகழ்ச்சியோ ஆணையத்தின் அனுமதி இன்றி ஒளிபரப்பக் கூடாது.

விதிமுறைகளை மீறி செயல்பட்டால் அவர்கள் மீது ஆணையம் தக்க நடவடிக்கை எடுக்கும்!