spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாபாஜக., ரத யாத்திரையைத் தடுக்க மம்தா கையாண்ட அநாகரிகம்! போலி உளவு அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில்...

பாஜக., ரத யாத்திரையைத் தடுக்க மம்தா கையாண்ட அநாகரிகம்! போலி உளவு அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் கொடுத்தது அம்பலம்!

- Advertisement -

மேற்கு வங்க மாநிலத்தில் அமித்ஷாவின் ரத யாத்திரையைத் தடுப்பதற்கு மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கையாண்ட மோசமான வழிமுறை குறித்து இப்போது ஸ்டிங் ஆபரேஷன் மூலம் தெரியவந்துள்ளது. அமித் ஷா ரத யாத்திரைக்கு தடை விதித்த உச்ச நீதிமன்ற உத்தரவின் பின்னே மாநில அரசு போலியான உளவுத் துறை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாக இப்போது பரபரப்பு எழுந்துள்ளது.

பொதுத் தேர்தலை முன்னிட்டு மேற்குவங்கத்தில் தனது தேர்தல் பிரசார ரத யாத்திரையை பாஜக, தேசிய தலைவர் அமித்ஷா கடந்த 2018 டிச.7,9 மற்றும் டிச.14 ஆகிய தேதிகளில் நடத்திட திட்டமிட்டார். அப்போதே மம்தா பானர்ஜி அதற்கு தடை விதித்தார்.

ஆனால், பாஜக., இதில் மும்முரமாக இருக்கவே, இந்த யாத்திரையை தடை செய்ய வேண்டும் என்று மம்தா திட்டமிட்டார். அதற்காக, இந்த ரத யாத்திரையை மேற்கு வங்கத்தில் அனுமதித்தால், மத நல்லிணக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்று கூறி, மாநில அரசு இதை தடை செய்வதாக அறிவித்தார்.

இந்நிலையில், மாநில அரசின் இந்தத் தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தை அணுகியது பாஜக.,

ஆனால், மேற்குவங்க அரசு தனது நிலைப்பாட்டை நிரூபிக்க, மாநில உளவுத்துறை போலீசாரின் அறிக்கையை சமர்பித்தது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள விவரங்களை மையமாக வைத்து, உச்ச நீதிமன்றமும் ரத யாத்திரைக்குத் தடை விதித்தது.

இந்நிலையில், மாநில போலீசாரின் உளவுத்துறை அறிக்கை உண்மையானது தானா என்பது குறித்து இந்தியா டுடே டி.வி. சானல் ஒரு ஸ்டிங் ஆபரேஷனை மேற்கொண்டது.

அதில், மம்தா பானர்ஜியின் உத்தரவின் பேரில், மாநில போலீஸார் ஒவ்வொரு இடங்களில் இருந்தும் பொய்யான, போலியான அறிக்கைகளை அளிப்பதற்கு கட்டாயப் படுத்தப் பட்டார்கள் என்ற தகவல் தெரியவந்தது. இது குறித்து அந்த டிவி சேனல் சில விவரங்களை பதிவு செய்தது.

புர்பா பர்த்மான் மாவட்ட எஸ்.பி. கூறியபோது… இந்த ரதயாத்திரை திட்டம் குறித்தும், மாநில உளவு அறிக்கை விவரம் குறித்தும் எங்களிடம் எதுவும் கேட்கப் படவில்லை என்று கூறியுள்ளார்.

ஹவுரா மாவட்ட ரூரல் எஸ்.பி. கூறுகையில், தற்போதைய சட்டம் ஒழுங்கு நிலவரம் தொடர்பாக மேலிடத்தில் இருந்து எந்த வித சுற்றறிக்கையும் வரவில்லை! உள்ளூர் காவல் நிலையங்களில் பதிவான பழைய வழக்குகளின் விவரங்களைக் கேட்டார்கள். அவற்றை அவசர கதியில் தொகுத்து ஒரு அறிக்கை தயாரிக்குமாறு மேலிடத்தில் இருந்து அழுத்தம் தரப்பட்டது என்று க்கூறியுள்ளார்.

இந்தியா டுடே மேற்கொண்ட இந்த ஸ்டிங் ஆபரேசன் இப்போது வட நாட்டு ஊடகங்களில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

தன் மாநிலத்தில் பாஜக., நுழைவதை மம்தா விரும்பவில்லை. அதற்காக பல்வேறு உத்திகளைக் கையாண்டு வருகிறார். பாஜக., வந்துவிட்டால், தனது செல்வாக்கு ஆட்டம் கண்டு விடும் என்ற அச்சத்தால், என்ன செய்வது என்றே தெரியாமல் எதையாவது செய்து கொண்டே இருக்கிறார். அப்படித்தான் இந்த உளவு அறிக்கையை சமர்ப்பித்தார். ஆனால், பொய்யான ஒரு அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பது எவ்வளவு பெரிய குற்றம் என்பதைக் கூட அவர்கள் உணர்ந்து பார்க்கவில்லை.

பாஜக.மீது மம்தாவிற்கு ஏற்பட்டுள்ள காழ்ப்பு உணர்வின் காரணமாக, இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார் மம்தா. ஆனால், பிரதமர் மோடி கூட்டிய கூட்டத்தில், மாபெரும் எண்ணிக்கையில் கூட்டம் கூடியுள்ளது, மம்தாவின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.

Summary: Sting operation claims Mamata govt used fake intelligence reports of possible communal violence to deny BJP Rath Yatras in Bengal . The report by India Today claims that intelligence officers in various parts of Bengal have confirmed that there was no specific input about communal violence during BJP’s Rath Yatra. They admitted that the orders to provide reports claiming possible violence and law and order situations came from the ‘top’. In a startling revelation by a sting operation conducted by India Today, it has been claimed that the West Bengal government led by Mamata Banerjee has been deliberately blocking BJP’s Rath Yatra citing false intelligence reports which had claimed of serious law and order issues if the ‘Rath Yatras’ were to be held.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe