கட்டாய மதமாற்றம்… இது நம்ம வெர்ஷன்!

Published:

chris gayle art musium - 2026

ஒருவர் தனக்கு பிடித்துப்போய், யாருடைய தூண்டு தலும் இல்லாமல் தானாக வேறு மதத்தை தழுவுகிறார் என்றால் அது, அவர் விருப்பம், உரிமை.. அதை தடுக்க யாருக்கும் உரிமை கிடையாது..

ஆனால் ஒருவருடைய இயலாமையையும் நெருக்க டியான சூழலையும் பயன்படுத்தி, மூளைச்சலவை செய்து மதம் மாற்ற முயற்சி செய்வது, ஆன்மாவை கொலை செய்வதற்கு சமமானது..

இன்னும் பச்சையாக சொல்லப்போனால், நம்பி வந்த பெண்ணை அவளுக்கு தெரியாமல் வேறு ஒருவனுக்கு கூட்டிக்கொடுத்துவிட்டு, ஆதாயம் பார்க்கும் காரியத் தைவிட கேவலமானது.

பல ஆண்டுகளுக்கு முன்பு. என் இரண்டு தங்கைகளின் குடும்பத்திலேயே இரண்டு கிறிஸ்தவ குடும்பங்கள் இறங்கி மதமாற்ற வேலையை ஆரம்பித்தது. மத அடையாளங்களை வீடுகளில் திணித்தது.

எதற்கு ஆட்பட்டிருக்கிறோம் என்பதே என் தங்கைகள் குடுத்திற்கு புரியவில்லை..கடைசியில்,இனி நான் உங்கள் வீடுகளுக்கு வரவேண்டுமா வேண்டாமா என்று நிபந்தனையை போட்ட பிறகுதான், திணிப்புகளையெல்லாம் உதற ஆரம்பித்தனர்.

சம்மந்தப்பட்ட அந்த கிறிஸ்தவ குடும்பங்களிடம் சொன்னேன்.. என் பேரு மாணிக்கம்..எனக்கு இன்னொரு பேர் இருக்கு என்று பின்னாடி பிஜிஎம் போட்டு சில விஷயங்களை சொன்னோம்.. சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்ற பிறகு தலை தெறிக்க ஓடியது அந்த கோஷ்டிகள்..

ALSO READ:  குமரியில் மட்டும் ஏன் இப்படி ‘பகீர்’ புரளிகள்?

என் கிறிஸ்துவ நண்பர்களிடம் இது பற்றி சொல்லி வருத்தப்பட்டேன்..நாங்கள் வேளாங்கண்ணி போய் வரும்போதெல்லாம் உங்க வழிபாட்டுக்கு தேவை யான விஷயங்களை தானே கொடுக்கறோம் என்னைக் காவது திருப்பதி பெருமாள் போட்டோ, பழனி முருகன் டாலரை கொடுத்திருக்கோமா?

இதுங்கள மாறி, மதமாற்ற கோஷ்டியாலதான் எங்கள மாதிரி அமைதியா போற ஆளுங்களுக்கும் சேர்த்து கெட்ட பேரு என்று அந்த கிறிஸ்துவ நண்பர்கள் ஆதங்கப்பட்டனர்.

இப்போது தஞ்சை திருவிடைமருதூர் பாமக முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம், மதமாற்றத்தை தட்டிக்கேட்டதால் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி பரபரப்பாக ஓடுகிறது..

கொலை தொடர்பாக, சர்புதின். நிஜாமுதீன், அசாரு தீன், ரிஸ்வான், முகமது ரியாஸ் என்ற ஐந்து பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். போலீசாரின் புலன் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

ஆணவக்கொலைக்கு தனிச்சட்டம்போல,எந்த மதமாகட்டும், கட்டாய மத மாற்ற கோஷ்டிகளை சுளுக்கு எடுக்கவும் கடுமையான சட்டம் பிறப்பிக்கவேண்டிய அவசியம் உருவாகி வருகிறது.

(மதம் மிருகமாக்கும், மதம்பிடிக்க வைக்கும் என்று டெம்பிளேட் கருத்துக்களை கொண்டுள்ள மத நம்பிக்கையில்லாதவர்கள், மாற்றுப்பாதையை உபயோகிக்கவும். இங்கே வந்து குழப்பவேண்டாம்.

ALSO READ:  அண்ணாமலையின் அதிரடி அரசியலா அல்லது அமைதி புரட்சியா?

மத நம்பிக்கையையம் மத வெறியையும் நாங்களே நன்கு அறிவோம்)

– கருத்து: பத்திரிகையாளர் ஏழுமலை வேங்கடேசன்

Related articles

Recent articles

spot_img