பல்லால் தேங்காய் உரிக்கும் பலசாலி ராமலிங்கம்..! வைரலாகும் வீடியோ!

Published:

ramalingam coconut - 2026

இஸ்லாமிய மதமாற்றத்தை எதிர்த்து வாக்குவாதம் செய்ததால், கும்பகோணம் திருபுவனத்தில் வெட்டிக் கொல்லப்பட்ட ராமலிங்கம் குறித்து ஒரு வீடியோ வைரலானது.

வீட்டின் முன் அமர்ந்திருக்கும் ராமலிங்கம், தன் பற்களாலேயே மட்டைத் தேங்காயை உரித்துப் போடுகிறார். இந்தா.. என்று கை நீட்டிக் கொடுக்கிறார்.

இத்தகைய பலம் பொருந்திய நபரையா மதவாத அமைப்பினர் கொன்றுள்ளனர் என்று பலரும் தங்கள் வருத்தத்தை தெரிவிக்கின்றனர். மேலும், தஞ்சை மாவட்டம் கஜா புயலால் பாதிக்கப் பட்டபோது, தனது தொழில் ரீதியாக பயன்படுத்தும் பாத்திரங்களை இலவசமாகவே கொடுத்து, மற்றவர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளார். இதனை தனது சமூக வலைத்தளப் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.

இந்த வீடியோ, படங்களை பலரும் பகிர்ந்து வருகின்றனர். ஒரு நல்ல மனிதரை இப்படி வெட்டிக் கொன்றிருக்கிறார்களே என்று சமூக வலைத்தளங்களில் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.

Related articles

Recent articles

spot_img