வெற்றி பெறப் போவது யார்? ரஜினியா? திருநாவுக்கரசரா?

0
502

துளிகூட அரசியல் கிடையாது என்று சொன்னாலும், விஜயகாந்தை இன்று சந்தித்துப் பேசிய ரஜினிகாந்த் குறித்து திமுக., அமமுக., தரப்பு ஆதரவாளர்கள் இது நிச்சயம் அரசியல் ரீதியான சந்திப்புதான் என்கிறார்கள்.

இன்று காலை நடிகர் ரஜினிகாந்த், நடிகரும் அரசியல்வாதியுமான விஜயகாந்தை சந்தித்து நலம் விசாரித்தார். தேமுதிக.,வுடன் கூட்டணி குறித்து பேச்சுகள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், மூன்றாம் நபராக ரஜினிகாந்த் சென்று விஜயகாந்தை சந்தித்தது தற்போது பல்வேறு அனுமானங்களை உருவாக்கியுள்ளது.

இது குறித்து சமூகத்தளங்களில் பகிரும் திமுக., அதிமுக., தரப்பினர், இது பாஜக.,வுக்காக ரஜினிகாந்த் மேற்கொள்ளும் வேலை என்று தூபம் போடுகின்றனர். ஏற்கெனவே பாமக.,வுடன் அதிமுக., கூட்டணி சேர்ந்தது குறித்து கடும் அதிருப்தியிலும் ஏமாற்றத்திலும் இருக்கும் திமுக., தரப்பு, தொடர்ந்து தேமுதிக.,வும் அந்த அணியில் சேர்ந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறது.

இந்நிலையில், காங்கிரஸின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் விஜயகாந்தை சந்தித்து நேற்றுப் பேசினார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் சந்திப்பின் நோக்கம் குறித்து கேட்டனர். அதற்கு அவர், உடல் நலம் விசாரிக்கத்தான் வந்தேன் என்றார்.

இருப்பினும், கூட்டணி குறித்து பேசினீர்களா என்று கேட்டபோது, இது தேர்தல் நேரம், கூட்டணி குறித்து பேசும் நேரம். அப்படி இருக்கும் போது, அதைப் பற்றி பேசாமல் இருக்க முடியுமா? விரைவில் நல்ல பதில் சொல்வேன் என்றார்.

இருப்பினும், தேமுதிக., தரப்பு யாருக்கும் எந்த விதமான நேர்மறைத் தகவலும் சொல்லவில்லை.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் திடீரென விஜயகாந்த் வீட்டுக்குச் சென்று விசாரித்தார். பின்னர் செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, சிகிச்சைக்கு பின் நான் சிங்கப்பூரில் இருந்து வந்தபின் முதல் ஆளாக என்னை வந்து சந்தித்தவர் விஜயகாந்த்; அவர் சிகிச்சைக்கு பின் அமெரிக்காவில் இருந்து வந்தவுடன் நான் அவர் உடல்நலம் விசாரிக்க வந்தேன் என்றார் ரஜினிகாந்த்.

ஆயினும், ரஜினிகாந்த் பிஜேபியின் பி டீம் என்றும், ஸ்லீப்பர் செல் என்றும், அதனால்தான் அதிமுக., கூட்டணியில் விஜயகாந்த்தை இழுக்க அவர் வந்திருக்கிறார் என்றும், உடல் நலம் விசாரிக்க என்றால், அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பியதுமே வந்திருக்க வேண்டுமே என்று சமூகத் தளங்களில் குரல் எழுப்புகின்றனர்.

எது எப்படியோ… ஜெயிக்கப் போவது யாரு என்ற கேள்விதான் இப்போது எழுந்திருக்கிறது…! அது ரஜினியா? அல்லது திருநாவுக்கரசரா? என்று!


தினசரி செய்திகளின் தேர்தல் களம்..
உங்கள் வாக்கைப் பதிவு செய்யுங்கள்

அடுத்த பிரதமராக யார் வர வேண்டும் என நினைக்கிறீர்கள்?!

View Results

Loading ... Loading ...


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்:

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.