சியோல் அமைதி விருதை நாட்டுக்கு அர்ப்பணித்த மோடி!

Published:

narendramodi - 2026

சியோல் அமைதி விருது பெற்ற பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இந்த விருதை நாட்டு மக்கள் அனைவருக்கும் அர்ப்பணிப்பதாகக் கூறினார்.

சியோல் அமைதி விருது பெற்ற பிரதமர் மோடி, இந்த விருதை நாட்டு மக்கள் அனைவருக்கும் அர்ப்பணிக்கிறேன் என்றும், நமது அமைதி மற்றும் நல்லிணக்க கலாசாரத்துக்கு அர்ப்பணிப்பதாகவும் கூறினார்.

இரண்டு நாள் பயணமாக தென்கொரியா சென்றுள்ள பிரதமர் மோடி, முன்னதாக, அந்நாட்டு அதிபர் மூன் ஜே இன் ஐ சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பின்னர் இருநாட்டு தலைவர்களும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அப்போது பேசிய மோடி பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக இந்தியா – தென்கொரியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இருநாடுகளுக்கு இடையே வளர்ந்து வரும் உறவில் பாதுகாப்புத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. அதற்கு உதாரணமாகத் தான் இந்திய ராணுவத்தில் கே 9 வஜ்ரா சேர்க்கப்பட்டுள்ளது.. என்றார்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

மேலும், புல்வாமோ தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த தென் கொரிய அதிபருக்கு நன்றி தெரிவித்த மோடி, உலக நாடுகள் அனைத்தும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து, போரிட வேண்டிய நேரம் இது என்று கேட்டுக் கொண்டார்.

சியோல் அமைதி விருது பெற்ற பிரதமர் மோடி ஆற்றிய உரை…

 


[poll id=”8″]


 

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img