spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

HomeReporters Diaryஎதிர்பார்த்ததை விட அதிகமாகவே வாக்களித்துள்ளார்கள்: மநீம கமல் சந்தோஷம்!

எதிர்பார்த்ததை விட அதிகமாகவே வாக்களித்துள்ளார்கள்: மநீம கமல் சந்தோஷம்!

- Advertisement -

நடந்து முடிந்த இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட்டது. கட்சி தொடங்கி 14 மாதங்களே ஆன நிலையில் சந்தித்த முதல் தேர்தலில் வெற்றிபெறா விட்டாலும் பல இடங்களில் மூன்றாவது இடம் வந்துள்ளது. மக்களவைத் தேர்தலில் 3.79% வாக்குகளைப் பெற்றிருக்கிறது.

இந்நிலையில், தேர்தல் முடிவுக்குப் பிறகு மக்கள் நீதி மய்யதின் தலைவர் கமல் ஹாசன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து தங்களது அரசியல் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர்,

14 மாதங்களே ஆனக் குழந்தையை வாக்காளர்கள் வாரியணைத்து ஓடவிட்டுப் பார்ப்பார்கள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. எங்களுக்கு மிக நேர்மையாக ஓட்டு போட்டு, எங்களிடம் எங்களது கடமையைத் தவிர மற்ற எதையும் எதிர்பார்க்காமல் வாக்களித்த மக்களுக்கும், அந்த வாக்குகளை பெறுவதற்கு நேர்மையாக ஓட்டுக்களைக் குவித்திருக்கும் இவர்களை நான் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வெற்றியாளர்களாகத்தான் பார்க்கிறேன்.

அதுவும் இவர்களை நாளைய வேட்பாளர்களாகப் பார்க்கிறேன். அவர்களுக்கு ஒத்துழைப்பையும் வரவேற்பையும் அளித்த தமிழக மக்களுக்கு என் வாழ்த்துக்கள்.. என்றார்.

பின்னர் செய்தியாளர்கள் அவரிடம் கேள்விகளைக் கேட்டனர்.

அப்போது அவர், நாங்கள் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை எதிர்ப்பவர்கள் இல்லை, அதனை தமிழ்நாட்டில்தான் வைக்க வேண்டும் என்று கூறுகிறதைத்தான் எதிர்கிறோம். எங்களது விவசாயிகளை பாதிக்காத திட்டங்களைத்தான் நாங்கள் கேட்கிறோம். மற்ற நாடுகள் போல மக்கள் புழங்காத இடங்களில் அவர்கள் இந்தத்திட்டங்களை ஏற்படுத்தட்டும். ஆனால் வயக்காட்டில், மக்கள் புழங்கும் இடங்களில் இப்படி செய்வதை எதிர்ப்பேன்

இந்தத் தேர்தல் முடிவுகளை நான் தோல்வியாகப் பார்க்கவே இல்லை, வெற்றிப் பெருமிதத்தில் தான் உங்களிடம் பேசுகிறேன். இனிமேலாவது நாங்கள் பா.ஜ.கவின் பி டீம் என்று கூறாதீர்கள். நாங்கள் நேர்மையின் ஏ டீன்

இந்தத் தேர்தலில் மூலம் நாங்கள் பெரும் ஊக்கம் பெற்றிருக்கிறோம். இதுபோல நேர்மையான வாக்காளர்களை மக்கள் ஏற்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது!

தேர்தல் வரும் போகும், இந்தியாவின் எழுச்சி மிகு மாநிலமாக என்றைக்கும் தமிழகத்தை மாற்ற வேண்டும் என்பதே எங்களது இலக்கு, நம்பிக்கை…. என்றார் கமல்.

அப்போது செய்தியாளர்கள், மக்கள் உங்களுக்கு அங்கீகாரம் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அதனை விடுத்து நீங்கள் பிக்பாஸ், இந்தியன் 2 நடிக்கச் செல்கிறீர்களே.. என்று கேட்டனர்.

அதற்கு பதிலளித்த கமல், அரசியல் எம் தொழில் அல்ல, அதனை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அரசியலைத் தொழிலாகப் பார்ப்பதை மக்கள் நீதி மய்யம் எதிர்க்கிறது. கலை என்னுடைய தொழில், அரசியல் என்னுடைய கடமை என்றார்.

இந்தத் தேர்தலில் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் பெற்ற வாக்குகள்.

1) திருவள்ளூர் – 64,380
2) வட சென்னை – 1,02,659
3) தென் சென்னை – 1,27,547
4) மத்திய சென்னை – 92,047
5) ஸ்ரீ பெரும்புதூர் – 80,058
6) கோவை – 1,44,829
7) திருப்பூர் – 64,657
8)) சேலம் – 57,191
9) பொள்ளாச்சி – 59,545
10) விருது நகர் – 56,815
11) மதுரை – 84,656

அரக்கோணம் – 24,350
கிருஷ்ணகிரி – 16,791
தர்மபுரி – 15,082
நீலகிரி – 41,056
ஈரோடு – 47,719
நாமக்கல் – 30,947
கள்ளக்குறிச்சி – 14,587
விழுப்புரம் – 17,891
ஆரணி – 14,680
திருவண்ணாமலை – 14,654
திண்டுக்கல் – 38,692
கரூர் – 15,780
கடலூர் – 23,240
சிதம்பரம் – 14,794
மாயவரம் – 16,463
நாகப்பட்டினம் – 14,077
தஞ்சாவூர் – 22,948
சிவகங்கை – 22,209
தேனி- 11,891
ராமநாதபுரம் – 12,452
தூத்துக்குடி – 25,598
தென்காசி – 23,844
நெல்லை – 23,100
கன்னியாகுமரி – 8,382
புதுச்சேரி – 37,420

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe