இம்முறையும்… எதிர்க்கட்சியே இல்லாமல் ஆட்சி அமைக்கும் மோடி! காங்கிரஸ் மீண்டும் பரிதாபம்!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

bjp cong - 2026

எதிர்க்கட்சியே இல்லாமல் மீண்டும் ஆட்சி அமைக்கிறார் பிரதமர் மோடி. இம்முறையும் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துவிட்டது காங்கிரஸ் கட்சி!

மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற 55 தொகுதிகள் குறைந்தபட்சம் பெற வேண்டும் என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகி நாட்டையே பெரும் பரபரப்புக்கும் ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியிருக்கிறது. கருத்துக் கணிப்புகள், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் இவை எல்லாவற்றையும் மீறி, பாஜக., எதிர்பாராத வெற்றியை பெற்றுள்ளது. அதே நேரம், காங்கிரஸ் கட்சி எதிர்பாராத தோல்வியை சந்தித்துள்ளது.

கடந்த 2014 தேர்தலில் 44 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதனால், மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது. குறைந்தபட்டம் 55 இடங்களை பிடிக்கும் கட்சி மக்களவையில் எதிர்க் கட்சி வரிசையில் அமரும். ஆனால், கடந்த முறையும் காங்கிரஸ்க்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த தேர்தலிலும் காங்கிரஸ் 52 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால், இம்முறையும் எதிர்க்கட்சி வரிசையில் காங்கிரஸ் அமரவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தும் வெறும் 3 இடங்கள் குறைவாகப் பெற்றதால் காங்கிரஸ் இழக்கிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.