
பெரு நாட்டை சேர்ந்த ஒருவர், அந்நாட்டின் தலைநகரான லீமாவில் உள்ள ஒரு பாலத்திற்கு செல்ல முற்பட்டுள்ளார். ஆனால் தனக்கு சரியான வழி தெரியவில்லை என்று கூகுள் மேப்பை அணுகியுள்ளார்.
இந்நிலையில் சரியான தெருவிற்கு செல்ல வேண்டுமென்று கூகுள் ஸ்ட்ரீட் மேப்பை டவுன்லோட் செய்து அதை பார்த்துள்ளார். கூகுள் ஸ்ட்ரீட் மேப் என்பது நமது இடத்தை துல்லியமாக காட்ட பயன்படுத்தும் ஒரு செயலி. அந்த செயலியானது நமது இடத்தை மட்டுமல்லாது, அந்த இடத்தில் உள்ள நபர்களையும் துல்லியமாக காட்டும்.
எனவே அந்த நபர் ஸ்ட்ரீட் மேப் செயலியை பயன்படுத்தும்போது அவருக்கு தெரிந்த உருவம் ஒன்றை கண்டுள்ளார். பின் அந்த உருவத்தை உற்று நோக்கியுள்ளார்.
அப்போது ஒரு ஆண் வெள்ளை நிற சட்டையும் நீல நிற ஜீன்ஸும் அணிந்திருந்தார். மேலும் கருப்பு மற்றும் வெள்ளை ஆடை உடுத்திய பெண்ணும் அவருடன் இருந்ததை அந்த ஸ்ட்ரீட் மேப் காட்டிக்கொடுத்தது. அதுமட்டுமின்றி அருகிலிருந்த ஒரு பெஞ்சில், அந்த பெண்ணின் மடியில் இந்த ஆண் படுத்திருக்க, அந்த பெண்ணோ அந்த ஆணின் தலையை வருடிக்கொடுப்பதாக அந்த புகைப்படத்தில் இருந்தது.
இதனையடுத்து இந்த கட்சியைக் கண்ட கணவன், அதிர்ச்சியில் உறைந்து போனான். ஏனென்றால் சம்பவம் நடந்த அன்று அவரது மனைவியும் அந்த பெண் அணிந்திருந்த அதே நிற உடையை அணிந்திருந்தார் என்று அந்த பெண் தனது மனைவி என்று கணவன் உறுதிசெய்துள்ளார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.