வெள்ளத்தில் டிக்டாக்; இளைஞருக்கு நேர்ந்த கதி.!

137

water dead - 2026

அணைக்கு அருகே டிக்டோக் வீடியோ எடுக்க சென்ற 23 வயது இளைஞர் வெள்ளத்தில் சிக்கி பரிதாபமாக உயிரழந்தார்.

தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டத்திலுள்ள பிரேம்கல் பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவர்

கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனது இரண்டு நண்பர்களுடன் அருகிலுள்ள கப்பலால் தடுப்பணைக்கு குளிக்க சென்றுள்ளார்.

முன்னதாக மூன்று பேரும் தடுப்பணையில் இருந்து பாய்ந்து வரும் நீரில் நின்று டிக் டாக் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாரதவிதமாக திடீரென நீர்வரத்து அதிகரித்தது.

இதனையடுத்து டிக்டாக் இளைஞர்கள் மூன்று பேரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.

செய்வதறியாமல் தத்தளித்து கொண்டிருந்த இரண்டு பேர் பெரும் சிரமத்திற்கு இடையே உயிருடன் கரை ஏறி விட்டனா்.

தினேஷ் என்பவர் மட்டும் நீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் தேடியும் தினேஷ் கிடைக்கவில்லை.

இதனையடுத்து தேசிய பேரிடர் மீட்பு குழுவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு மீட்பு படையினர் 48 மணி நேரம் தேடி இன்று காலை சடலமாக தினேஷ் மீட்கப்பட்டார்.

ALSO READ:  திருவனந்தபுரம் - சென்னை சிறப்பு ரயில் மேலும் நீட்டிப்பு! மேலும் ரயில்கள் நீட்டிப்பு விவரம்!

அவரது நண்பர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் டிக் டாக் வீடியோ விவகாரம் வெளிவந்துள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.