
ஜூன் 21ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் மேலும் ஒரு வார காலத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு செய்யப் படுவதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.
தமிழகத்தில் தற்போது நடமுறையில் இருக்கும் ஊரடங்கு, மேலும் 1 வாரத்திற்கு அதாவது, ஜூன் 21ஆம் தேதி வரை நீட்டிக்கப் படுகிறது.
ஜூன் 14ஆம் தேதி முதல் ஜூன் 21ஆம் தேதி வரையில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. மேலும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

11 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள்
கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப் பட்டுள்ளன. அதன்படி,
11 மாவட்டங்களில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகள் இ.பதிவுடன் அனுமதிக்கப்படும்;
எலக்ட்ரீசியன், பிளம்பர், கணினி பழுது நீக்குவோர், இயந்திரங்கள் பழுது நீக்குவோர் செயல்பட அனுமதிக்கப் படும்.
எலக்ட்ரீசியின், பிளம்பர், தச்சர் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப் படும்.
11 மாவட்டங்களில் மெக்கானிக் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப் படும்.
11 மாவட்டங்களில் வாடகை வாகனங்கள், டாக்சி, ஆட்டோக்கள், இ.பதிவு செயல்பட அனுமதிக்கப்படும்.

27 மாவட்டங்களில் மட்டும் மதுக்கடைகள் திறப்பு :
தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்கள் நீங்கலாக, 27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்க அனுமதிக்கப் படுகிறது.
டாஸ்மாக் மதுக்கடைகள், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகள் செயல்பட அனுமதிக்கப்படும்.
27 மாவட்டங்களுக்கான கூடுதல் தளர்வுகள்
சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,
சலூன்கள், பியூட்டி பார்லர்கள் ஆகியவை ஏசி இன்றி, காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
சலூன்கள், பியூட்டி பார்லர்கள் ஆகியவை 50% வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம். .
அரசு பூங்காக்கள், உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடைப்பயிற்சிக்கு அனுமதிக்கப்படும். உள்ளாட்சி அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள விளையாட்டுத் திடல்களிலும் நடைபயிற்சி அனுமதிக்கப்படும்.
செல்போன் மற்றும் அதனை சார்ந்த பொருட்கள் விற்பனைக் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயங்கலாம்,.
வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.
மிக்சி, கிரைண்டர், டிவி உள்ளிட்ட வீட்டு உபயோக பொருள் பழுது நீக்கும் கடைகள், சர்வீஸ் சென்டர்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படலாம்.
வேளாண் உபகரணங்கள், பம்பு செட் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம்.
கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள், காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை செயல்படலாம்.
முழுமையான தகவல்கள்…
Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.