கர்நாடக மாநிலம் மைசூருவில் தசரா திருவிழாவின் போது பட்டாசு சத்தத்தை கேட்டு யானை மிரண்டதால் , பொதுமக்கள் அலறியடித்து ஓடினர் .
மைசூரிலும், மாண்டியாவிலும் தசரா விழா ஒவ்வொரு ஆண்டும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம் . மைசூரில் தசரா விழா கொண்டாடப்படுவதற்கு , மூன்று நாட்களுக்கு முன்பே மாண்டியாவில் உள்ள சாமூண்டீஸ்வரி அம்மன் கோயிலில் தசரா விழா நடைபெறும் .
அதன்படி , மாண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணாவில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலில் தசரா விழாவுக்கான சாமி ஊர்வலம் நடைபெற்றது .
அம்மனை தங்க அம்பாரியில் வைத்து யானை சுமந்துசென்ற போது விழாவில் பட்டாசுகள் வெடிக்கப் பட்டன .
தொடர்ச்சியாக பட்டாசுகள் வெடித்ததால் யானை மிரண்டது . பிறகு திடீரென மதம் பிடித்ததை போல் யானை பிளிறியதால் , ஊர்வலத்தில் வந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர் .
மிரண்டு போன யானையை அருகிலிருந்த கும்கி யானையை கொண்டு ஆசுவாசப்படுத்தினர் . பாகனும் அதை கட்டுக்குள் கொண்டு வந்தார் .
யானை அமைதி நிலைக்கு திரும்பியதால் , சாமி ஊர்வலம் தொடர்ந்து நடைபெற்றது . இதனால் அப்பகுதியில் இருந்த மக்கள் அச்சம் அடைந்தனர்.
#WATCH | An elephant carrying a howdah got panicked due to sounds of firecrackers and music during Dasara celebrations in Srirangapatna area of Mandya, Karnataka today. Mahouts managed to successfully control the elephant. No casualties were reported. pic.twitter.com/AsmfoT724S
— ANI (@ANI) October 9, 2021