திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் அடங்கிய, இந்து முன்னணி நெல்லை கோட்ட பொதுக்குழுக் கூட்டம் கோவில்பட்டி ஜெய்ஸ்ரீ திருமண மண்டபத்தில் 10.10.2021 ஞாயிறு இன்று காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது.
கோட்டத் தலைவர் T.தங்கமனோகர் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் பெ.சக்திவேலன், M.சீனிவாசன் (கோவில்பட்டி நகர தலைவர்) முன்னிலை வகிக்க, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் வரவேற்புரை நிகழ்த்தினார். கம்மவார் சமுதாய சங்க தலைவர் வெங்கடேஷ் சென்னகேசவன் திருவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக, நா.முருகானந்தம் (மாநில பொதுச் செயலாளர்), டாக்டர் த.அரசுராஜா (மாநில பொதுச்செயலாளர்), வி.பி.ஜெயக்குமார் (மாநில துணைத் தலைவர்), கே.கே. பொன்னையா (மாநில இணை அமைப்பாளர்), கா.குற்றாலநாதன் (மாநில செயலாளர்) ஆகியோர் கலந்து கொண்டனர். கோவில்பட்டி நகர செயலாளர் S.வெங்கடேசன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் திருநெல்வேலி தூத்துக்குடி கன்னியாகுமரி மாவட்டங்களை சார்ந்த மாவட்ட , ஒன்றிய , நகர இந்துமுன்னணி நிர்வாகிகள் மற்றும் இளைஞர் முன்னணி , வழக்கறிஞர் முன்னணி , ஆட்டோ தொழிலாளர் முன்னணி , இந்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1) பக்தர்கள் கோவிலுக்கு காணிக்கையாக கொடுத்த தங்கத்தை இந்து சமய அறநிலையத்துறை உருக்க கூடாது. அது ஊழலுக்கு வழிவகுக்கும் திட்டமாகும் எனவே இத்திட்டத்தை கைவிட தமிழக அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது
2) கன்னியாகுமரி மாவட்டம் தாய்தமிழகத்துடன் இணைய போராடிய அய்யா தாணுலிங்கநாடார் அவர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைந்த தினமான நவம்பர் 1ஆம் தேதி அரசு விழா எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது
3 )1982-ஆம் ஆண்டு குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மிஷனரிகளால் நடத்தப்பட்ட மண்டைக்காடு கலவரத்தில் காணாமல் போன 14 ஹிந்துக்கள் 40 வருடங்களுக்கு மேலாகியும் கிடைக்காத நிலையில் அவர்களை இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்து அவர்கள் குடும்பத்திற்கு உரிய நிவாரணமும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது
4 ) நெல்லை மாநகரம் பழைய பேட்டையில் 250 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் இந்துக்களின் நிலங்களை தற்போது வக்பு வாரிய நிலம் என கூறி முஸ்லிம்கள் அபகரிக்க முயற்சி செய்கின்றனர் . பத்திரப் பதிவுத் துறையும் மின்சார வாரியமும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக பத்திரப் பதிவையும் புதிய மின் இணைப்பையும் நிறுத்தியுள்ளது கண்டனத்துக்குரியதாகும் பழையபடி பத்திரப்பதிவு மின் இணைப்பும் தொடர வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது
5) தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மாநகராட்சி பணிகளை காரணம் காட்டி பல இந்து கோயில்கள் இடிக்கப்பட்டு வருவது வேதனைக்குரியதாகும் ஆலயங்களுக்கு மாற்று இடம் ஒதுக்கி அதன் பின்னர் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது
6) திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா வள்ளியூர் சுப்பிரமணிய சாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சர்ச் நிர்வாகம் ஆக்கிரமித்து கட்டுமான பணிகள் மேற்கொண்டு வருகிறது . மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் அந்த சர்ச் கட்டுமானங்களை அகற்றி அங்கு முருகன் கோவிலுக்கு அன்னதான கூடம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது
7)தூத்துக்குடி மாவட்டம் சுதந்திர போராட்ட வீரர்கள் தளபதி பிள்ளை மதுரகவி பாஸ்கரதாஸ் ஆகியோரது நினைவிடங்களை பராமரித்து அவர்களுக்கு அரசு சார்பில் விழா எடுக்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது