
வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கும், கொரோனா ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
தென்னாப்ரிக்காவில் முதன்முறையாக கண்டறியப்பட்டுள்ள புதிய வகையான கொரோனா ஒமைக்ரான், உலகின் பிற நாடுகளுக்கும் பரவி வருகிறது. இதனால் உலகின் பல நாடுகள், வெளிநாடுகளில் இருந்து தங்கள் நாட்டுக்கு வருவோருக்கான கட்டுப்பாடுகளை மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி பயணம் தொடங்குவதற்கு முன்பு 14 நாட்களுக்கு முன்னர் பயணிகள் எங்கெங்கு சென்றார்கள் என்கிற விபரங்களை அளிக்க வேண்டும். அதேபோல அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் விபரங்களை அவர்கள் சமர்பிக்க வேண்டும்.
மேலும் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் 72 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் நெகட்டிவ் சான்றை கையில் வைத்திருக்க வேண்டும். அவர்கள் மட்டுமே நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவிய நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்படும். அதுதொடர்பான முடிஉ தெரியும் வரை அவர்கள் விமான நிலையத்தில் தங்கி இருக்க வேண்டும்.
இதுதொடர்பான விவரங்கள் AIR SUVIDHA இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது.