December 8, 2024, 12:03 PM
30.3 C
Chennai

ஃபிட்னெஸ் வாட்ச்களை ஃபோனுடன் இணைக்க..!

கையில் அணிந்து கொள்ளக் கூடிய ஃபிட்னெஸ் வாட்ச்கள் சமீப காலங்களில் பல்வேறு தரப்பினராலும் பயன்படுத்தப்படுகிறது.

உடலின் வலிமையையும், உடல் செயல்பாடுகளையும் தொடர்ந்து கண்காணிக்க இந்த ஃபிட்னெஸ் வாட்ச்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பயனாளர்களுக்கு வெவ்வேறு நிறுவனங்கள் வெளியிட்டிருக்கும் ஃபிட்னெஸ் வாட்ச்களைத் தேர்ந்தெடுத்து வாங்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. ஷாவ்மி, ஃபிட்பிட், அமேஸ்ஃபிட், ஹானர், நாய்ஸ் முதலான நிறுவனங்கள் அதிகம் பேரால் விரும்பி வாங்கப்படுகின்றன.

பெரும்பாலான இத்தகைய பிராண்ட்களுக்குள் ஒப்பிடுகையில், நாய்ஸ் நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஒவ்வொரு ஃபிட்னெஸ் வாட்ச்களும் அவற்றிற்கென பிரத்யேகமாக வெளியிடப்பட்டிருக்கும் ஆப்களைப் பயன்படுத்தும் போது மட்டுமே வேலை செய்யக் கூடியனவாக இருக்கின்றன.

சரியான ஆப்களைத் தேர்ந்தெடுத்துப் பயன்படுத்தும் போது, உங்கள் ஃபிட்னெஸைக் கண்காணிக்கும் பணி எளிதாக மாறி விடுகிறது. அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஃபிட்னெஸ் ஆப்களின் மூலமாக ஃபிட்னெஸ் டேட்டாவைக் கண்காணிக்கலாம்; உங்கள் டிவைஸை அப்டேட் செய்யலாம். மேலும் உங்கள் நாய்ஸ் ஃபிட்னெஸ் வாட்ச் மாடலின் அடிப்படையில் வெவ்வேறு சிறப்பம்சங்கள் இருக்கின்றன.

ALSO READ:  திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா சிறப்பு ரயில்!

நாய்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள ஃபிட்னெஸ் வாட்ச்களை உங்கள் ஐஃபோன், ஆண்ட்ராய்ட் கருவிகளில் இணைப்பதற்கான வழிமுறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

உங்கள் ஃபிட்னெஸ் வாட்ச்சிற்கு ஏற்ற சரியான ஆப் பயன்படுத்தாமல் இருந்தால், உங்கள் ஸ்மார்ட்ஃபோனுடன் இணையாமல் போகலாம். மேலும் ஃபிட்னெஸ் வாட்சின் பேட்டரி அளவு 50 சதவிகிதத்திற்கு மேல் இருக்க வேண்டும்.

இந்த வழிமுறைகள் Noise ColorFit Brio, Noise Fit Agile, Noise Colorfit Pulse, Noise ColorFit Ultra, Noise Colorfit NAV+, NoiseFit Active ஆகிய ஃபிட்னெஸ் வாட்ச்களுடன் ஸ்மார்ட்ஃபோனை இணைப்பதற்குப் பயன்படும்.

  1. உங்கள் NoiseFit Core 50 சதவிகிதத்திற்கும் மேல் சார்ஜ் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்யவும்.
  2. உங்கள் ஸ்மார்ட்ஃபோனில் Noise Fit ஆப் டவுன்லோட் செய்ய வேண்டும். இந்த ஆப் ஆண்ட்ராய்ட், ஐஃபோன் ஆகிய இரு வகைகளிலும் வெளியிடப்பட்டுள்ளது.
  3. டவுன்லோட் செய்த பிறகு, அது செயல்படுவதற்குத் தேவையான அனுமதிகளை வழங்க வேண்டும்.
  4. இந்த ஆப்பில் உங்கள் ஃபேஸ்புக், கூகுள் அல்லது ஈமெயில் பயன்படுத்தி லாகின் செய்யவும்.
  5. Pair Devices பட்டனை அழுத்தி, ப்ளூடூத் மூலம் ஃபிட்னெஸ் வாட்சை ஸ்மார்ட்ஃபோனுடன் இணைக்கவும்.
  6. ஆப் காட்டும் பட்டியலில் உங்கள் வாட்சைத் தேர்ந்தெடுத்து, உங்கள் வாட்சில் அதனை உறுதி செய்யவும்.
  7. இணைத்த பிறகு, அதில் கேட்கப்படும் விவரங்களைக் கொடுத்து, உங்கள் ஃபிட்னெஸ் வாட்சைப் பயன்படுத்தலாம்.
ALSO READ:  ஜனகை மாரியம்மன் கோயிலில் விஜயதசமி அம்பு எய்தல்!

NoiseFit Apex, NoiseFit Peak, NoiseFit Sport, NoiseFit Track, NoiseFit Assist ஆகிய வெவ்வேறு ஆப்கள் ஒவ்வொரு ஃபிட்னெஸ் வாட்ச்களுடன் இணையும் அம்சம் கொண்டவை.

அதனால் நீங்கள் வாங்கும் Noise ஃபிட்னெஸ் வாட்சிற்கு ஏற்ற ஆப்களைப் பயன்படுத்தி இணைத்துக் கொள்ளலாம். சரியான ஆப் பயன்படுத்தும் போது மட்டுமே, உங்கள் ஃபிட்னெஸ் வாட்சை இணைக்க முடியும்.

author avatar
Suprasanna Mahadevan

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட் – பகலிரவு ஆட்டம் – முதலிரண்டு நாள்கள்

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட்– பகலிரவு ஆட்டம் –...

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட் – பகலிரவு ஆட்டம் – முதலிரண்டு நாள்கள்

இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் இரண்டாவது டெஸ்ட் – அடிலெய்ட்– பகலிரவு ஆட்டம் –...