தமிழத்தில் கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு பத்து, பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளி திறக்கப்பட்டது.
அப்போது இரண்டாவது அலை வேகமெடுத்ததால் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வருடந்தோறும் நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற வில்லை.
பின்னர் தற்போது கொரோனா சற்று குறைந்துள்ளதால், பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு நடந்து வருகிறது.
இந்த நிலையில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் வரும் ஜனவரி 19 முதல் பிப்ரவரி 18 வரை ஆசிரியர் பொது மாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் கலந்தாய்வு நடைபெறும் என்று பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.
கலந்தாய்வில் பங்கேற்க இன்று முதல் வரும் 7 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.