spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?விளம்பரத்தின் தொல்லை! மாற்றியமைக்க வழி..!

விளம்பரத்தின் தொல்லை! மாற்றியமைக்க வழி..!

- Advertisement -

Chrome பிரவுசரில் பயனாளர்களை follow செய்யும் Third Party Cookies-க்குப் பதிலாக நேற்று புதிய தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது கூகுள்.

இன்று இன்டர்நெட்டில் நாம் காணும் விளம்பரங்களின் தன்மையை மொத்தமாக மாற்றியமைக்க சாத்தியமுள்ள இதைப் பற்றி சுருக்கமாகப் பார்ப்போம்.

நீங்கள் ஒரு சராசரி இன்டர்நெட் யூசராக இருந்தாலே போதும். Cookies பற்றி நிச்சயம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒரு வெப்சைட்டுக்கு நாம் செல்லும்போது, நம்மைப் பற்றி அந்த வெப்சைட் (நம் டிவைஸ்களில்) சேமிக்கும் தகவல்கள்தான் இந்த Cookies.

ஒவ்வொருமுறை நாம் அந்த வெப்சைட்டிற்கு செல்லும் போதும், இவை அந்த வெப்சைட்டால் பயன்படுத்திக் கொள்ளப்படும். இவை எப்படி சேமிக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்து 2 வகைகளாகப் பிரிக்கப்படுகிறது.

  1. First Party Cookies:

உதாரணமாக, Abcbooks.com என்ற வெப்சைட்டிற்கு நாம் செல்கிறோம் என வைத்துக்கொள்வோம். அப்போது அந்த வெப்சைட்டானது, நம்முடைய யூசர்நேம், பாஸ்வேர்டு, நம் இருப்பிடம், Language Settings போன்ற தகவல்களை சேமித்துக்கொள்ளும்.

எதற்காக? அப்போதுதான், அடுத்தமுறை நம் அந்த வெப்சைட்டிற்கு செல்லும்போது நம்மை திரும்பவும் லாகின் செய்யச் சொல்லாமல், நம்மிடம் திரும்பவும் விவரங்களைக் கேட்காமல் சேவை வழங்க முடியும்.

இப்படி, ஒரு வெப்சைட் நேரடியாக தன் யூசர்களின் தகவல்களைச் சேமிப்பது First Party Cookies. இப்படி நேரடியாக சேகரிக்கப்படும் யூசர்களின் டேட்டா, First Party Data.

  1. Third Party Cookies:

அதே Abcbooks.com வெப்சைட்டில், வேறு சில நிறுவனங்களும் நம் தகவல்களைச் சேமித்துக்கொண்டிருக்கும். உதாரணமாக, அந்த வெப்சைட்டில் என்ன வாங்குகிறோம், எவ்வளவு நேரம் அதில் செலவிடுகிறோம், நம்முடைய கேட்ஜெட் என்ன போன்ற தகவல்களையெல்லாம் அவை சேமிக்கும்.

இப்படி நம்முடைய தகவல்களை சேமித்துக்கொள்ள Abcbooks வெப்சைட், அந்நிறுவனத்திற்கு (உதாரணம்: ad.doubleclick.net) அனுமதியும் கொடுத்திருக்கும்.

இது எதற்கு? விளம்பர நோக்கங்களுக்காக. நாம் கூகுளில் தேடிய ஒரு பொருள், அதற்கடுத்து எந்த வெப்சைட்டிற்கு போனாலும் விளம்பரங்களாக வருகிறதல்லவா? அதற்கு காரணம்.

இப்படி நேரடியாக இல்லாமல், மறைமுகமாக வெவ்வேறு வெப்சைட்களில் பெறப்படும் யூசர்களின் தகவல்கள்தான் Third Party Cookies.

ஒவ்வொருமுறையும் ஏதேனும் வெப்சைட்டிற்குச் சென்றால், Cookies-ஐ அனுமதிக்க ஒரு Pop-up வருமே? அது இதுதான். இதற்குத்தான் இப்போது கடிவாளம் போடுகிறது கூகுள்.

இந்த Third Party Cookies என்பவை நேரடியாக நம் பிரைவசியை பாதிப்பவை. நம் அனுமதியின்றியோ அல்லது நமக்குத் தெரியாமலோ விளம்பர நிறுவனங்களால் சேமிக்கப்படுபவை.

அதன்பின்பு நம்மை விளம்பரங்களுக்கு Target செய்ய பயன்படுபவை. நம்மை இன்டர்நெட்டில் எந்நேரமும் பின்தொடருபவை (Tracking). டிஜிட்டல் விளம்பர நிறுவனங்களுக்கு லாபத்தைக் கொட்டிக்கொடுப்பவை.

இதன் சிக்கல்கள் பற்றி பல வருடங்களாகப் பேசப்பட்டாலும், 2018-ம் ஆண்டு ஐரோப்பிய யூனியனில் அமலான GDPR விதிகள், ஃபேஸ்புக் மூலம் அமெரிக்கா வாக்காளர்களை டார்கெட் செய்த கேம்பிரிட்ஜ் அனலிடிகா பிரச்னை உள்ளிட்ட விவகாரங்களுக்குப் பிறகுதான் இதன்மீது இன்னும் அதிக கவனம் குவிந்தது.

அதன்பிறகு டிஜிட்டல் பிரைவசி பற்றிய விழிப்புணர்வு மக்களிடமும் அதிகரிக்கத் தொடங்க, டெக் நிறுவனங்கள் நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின. அப்படித்தான் பிரவுசர்கள், Third Party Cookies-ஐ தீவிர பிரச்னையாகக் கருதி இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்தன.

அதைத்தொடர்ந்துதான் ஆப்பிள் நிறுவனத்தின் சஃபாரி, ஃபயர்ஃபாக்ஸ் உள்ளிட்ட பிரவுசர்கள் Third Party Cookies-ஐ பிளாக் செய்தன. கூகுள் குரோம் அப்படி செய்யவில்லை.

Third Party Cookies-ஐ பிளாக் செய்ய ஒரு ஆப்ஷனை மட்டும் கொடுத்தது; Default-டாக பிளாக் செய்யவில்லை. ஆனால், 2023-ம் ஆண்டுக்குள் இதைச் செய்து விடுவோம் எனச் சொல்லியிருக்கிறது. அதற்கான அடுத்த அடிதான் நேற்றைய அறிவிப்பு.

சஃபாரி, ஃபயர்ஃபாக்ஸ் மற்றும் இன்னபிற பிரவுசர்களை விடவும் இந்த விவகாரத்தில் கூகுள் குரோமின் முடிவுதான் டெக் உலகில் உற்றுநோக்கப்படுகிறது.

காரணம், பிரவுசர்களில் 60%-க்கும் மேல் சந்தையை வைத்திருப்பது குரோம்தான். மேலும், மற்ற நிறுவனங்களை விடவும், டிஜிட்டல் விளம்பரங்களில் பெரும்பகுதியைக் கொண்டிருப்பதும்தான் கூகுள்தான்.

அதனால், கூகுளின் முடிவு டிஜிட்டல் விளம்பர நிறுவனங்கள் மற்றும் அந்நிறுவனத்தின் லாபம். இரண்டிற்குமே முக்கியம். சரி, நேற்று என்ன செய்திருக்கிறது?

இதுவரைக்கும் ஒரு தனிநபராக நாம் எந்த வெப்சைட்டில் என்ன செய்கிறோம் என நம்மை உளவுபார்த்ததல்லவா? அதற்கு பதிலாக வேறொரு ரூட்டைக் கையில் எடுத்திருக்கிறது. அதன் பெயர் Topics API. இது எப்படி செயல்படும்? உதாரணத்துடன் பார்ப்போம்.

ஒரு வாரத்தில் நீங்கள் குரோமில் பிரவுஸ் செய்யும் வெப்சைட்டுகளை வைத்து, நீங்கள் அதிகமாக எந்த மாதிரியான பிரிவுகளில் பிரவுஸ் செய்கிறீர்கள் என குரோம் கண்காணிக்கும். அதைவைத்து உங்களின் டாப் 5 டாபிக்குகள் முடிவு செய்யப்படும். உதாரணமாக, Sports, Movies, Cricket, Food, Travel இப்படி.

அடுத்து நீங்கள் எந்த தளத்திற்குச் சென்றாலும், இந்த டாபிக்குகளின் கீழ்தான் உங்களுக்கு விளம்பரங்கள் காட்டப்படும். இந்த டாபிக்குகள் 3 வாரத்திற்கு மட்டுமே இருக்கும். பின் அது டெலிட் செய்யப்பட்டு புதிய டாபிக் சேரும். இவற்றை மாற்ற நினைத்தால் நீங்களே குரோம் செட்டிங்ஸில் மாற்றிக்கொள்ளவும் முடியும்.

இதற்கு முன்பு உங்களின் வெப்சைட் ஹிஸ்டரி, அங்கு என்ன செய்கிறீர்கள் என்பதையெல்லாம் கண்காணித்து, விளம்பரங்களைக் காட்ட உதவிய குரோம் இனி, நீங்கள் எந்த டாபிக்குகளில் அதிகம் செலவிடுகிறீர்கள் என்பதை மட்டும் வைத்து விளம்பரங்களைக் காட்ட உதவும்.

எனவே, உதாரணமாக இனி TNPSC-க்கு படிப்பது என கூகுளில் தேடிவிட்டு, வேறு தளத்திற்கு சென்றால், அங்கு TNPSC கோச்சிங் சென்டர் விளம்பரங்கள் காட்டப்படாது. மாறாக, கல்வித்துறை சார்ந்த விளம்பரங்களே பொதுவாகக் காட்டப்படும்.

இது எப்போது அமலுக்கு வரும்?

இதை நேற்றுதான் அறிவித்திருக்கிறது கூகுள். மேலும், இது இப்படியே உறுதியாக அமலாகுமா என்பதிலும் சந்தேகம் இருக்கிறது. காரணம், இதற்குமுன்பு இதேபோல Third Party Cookies-க்கு பதிலாக FLoC என ஒரு முறையை முன்வைக்க, அதற்கும் பிரைவசி ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது.

அதையடுத்துதான் இப்போது இந்த டாபிக்ஸ் முறையை முன்வைத்திருக்கிறது. இது அதைவிட கொஞ்சம் ஓகேதான் என்றாலும், விளம்பரதாரர்கள் நாம் எந்த மாதிரியான வெப்சைட்டுகளைப் பார்க்கிறோம் என அறிந்துகொள்வது கூட பிரைவசி சிக்கல்தான் என்கின்றனர் நிபுணர்கள்.

எனவே இதை கூகுள் தீவிரமாக முன்னெடுத்தால், பலகட்ட சோதனைகளுக்குப் பின்னர் இன்னும் ஓராண்டில் அமலுக்கு வந்துவிடலாம்.

இதற்குப் பின் நம்மை இன்டர்நெட்டில் கூகுள் ஃபாலோ செய்யாதா?

குரோம் பிரவுசர் மூலம், நம்மைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து பிற விளம்பர நிறுவனங்களிடம்தான் கொடுக்காதே தவிர, கூகுள் அதன் பிற சேவைகளில் (Youtube, Maps, etc) நம் டேட்டாவை சேகரித்துக் கொண்டும் டிராக் செய்துகொண்டும்தான் இருக்கும்.

அது First Party Data என்பதால் அதற்கு எந்தப் பிரச்னையும் இல்லை. (கூகுள் சர்ச் மூலம் வரும் விளம்பர வருமானம்தான், Third Party Cookies சார்ந்த விளம்பரங்கள் மூலம் வரும் வருவாயை விடவும் மிக அதிகம்.) இருப்பினும் ஒட்டுமொத்தமாக நமக்குத் தெரியாமல் நம் டேட்டாவை சேகரிக்கும் நிறுவனங்கள் கணிசமாகக் குறையும் என்பது உறுதி.

எனவே கூகுளிற்கு இதனால் பெரியளவில் பாதிப்பில்லை. ஆனால், டிஜிட்டல் விளம்பர நிறுவனங்கள் மாற்று தொழில்நுட்பங்களை நோக்கி நகரவேண்டும்.

மேலும், கூகுள் குரோமில் Third Party Cookies-ஐ பிளாக் செய்யும் வசதி இப்போதே இருக்கிறது (ஆனால், இந்த ஆப்ஷனைப் பயன்படுத்தும் யூசர்கள் மிக மிகக்குறைவு). இருந்தும் ஏன் இப்படி கூகுள் மாற்று தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்த முயற்சி செய்கிறது?

“விளம்பர நிறுவனங்களுக்கு உதவும் வகையில் Third Party Cookies-க்கு மாற்றாக ஒன்றை நாம் உருவாக்கவில்லையென்றால், அது அவர்கள் இன்னும் முறையற்ற வழிகளில் டேட்டாவை சேகரிக்கவே ஊக்குவிக்கும். யூசர்களின் பிரைவசிக்கு அது இன்னும் ஆபத்து என்பதால்தான் மாற்று தொழில்நுட்பங்களை உருவாக்க நாங்கள் உழைக்கிறோம்” என்கிறது கூகுள்.

இப்படியாக 2023-க்குள் கூகுள் இந்த மாற்று முயற்சியில் வெற்றியடைந்துவிட்டால், பின்னர் அதை அனைத்து பிரவுசர்களும் பின்பற்றலாம். அது இன்டர்நெட்டில் டிஜிட்டல் விளம்பர சந்தையிலும் பெரியளவில் தாக்கம் செலுத்தலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe