குழந்தைகள் செய்யும் குறும்புகளை ரசிக்காதர்வர்கள் இங்கே எவரும் இல்லை. அவர்கள் செய்யும் குறும்புகளையும், சேட்டைகளையும் பார்த்தாலே நம் கவலைகள் அனைத்தும் மறந்துவிடும் என்றே கூறலாம்.
ஒரு வயதிற்கும் குறைவான சுட்டிக் குழந்தைகள் தவழ்ந்து செல்லும் பந்தயத்தில் கலந்து கொண்டால் அவர்கள் செய்யும் குறும்புகள் பற்றி சொல்லவா வேண்டும்.
கூடைப்பந்து மைதானத்தில் நடத்தப்பட்ட மழலைகளுக்கான தவழும் பந்தயத்தில் ஏராளமான குழந்தைகள் தவழும் வீடியோ சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
கூடைப்பந்து மைதானத்தில் நடைப்பெற்ற இந்த பந்தயத்தில் குழந்தைகள் அனைவரும் ஒரு பக்கத்திலிருந்து தவழ்ந்து சென்று மறுபக்கத்தில் இருக்கும் வெற்றிக்கோட்டை கடந்து தங்களது பெற்றோரை அடைய வேண்டும்.
பந்தயம் தொடங்கியவுடன் குழந்தைகள் மறுபக்கத்தில் இருக்கும் தங்களது பெற்றோரை நோக்கி தவழ துவங்குகிறார்கள். ஆனால் இதில் ஒருசில குழந்தைகள் அதே இடத்தில் இருந்து விளையாடுவதும், அழுவதுமாக இருக்கும் போது இரு குழந்தைகள் மட்டும் ஒன்றன் பின் ஒன்றாக வெற்றிக்கோட்டை நோக்கி தவழ்கின்றனர்.
அனால் அங்கே தான் ட்விஸ்டே உள்ளது, வெற்றிக்கோட்டை நெருங்கும் நேரத்தில் அவ்விரு குழந்தைகளும் தங்கள் பெற்றோரை மறந்துவிட்டு ஒருவருக்கொருவர் விளையாடத் தொடங்கிவிடுகிறார்கள்.
இதே போல் அடுத்து அடுத்து வரும் ஒவ்வொரு வீடியோவில் குழந்தைகள் செய்யும் குறும்புகளை ஒரு தொகுப்பாக தன்சு யேகன் என்பவர் ‘உலகின் அழகான விளையாட்டு – குழந்தைகளுக்கான தவழும் பந்தயம் தான்’ என்று தலைப்பிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர், 600க்கும் மேற்பட்ட பயனர்கள் இந்த ட்வீட்டுக்கு பதிலளித்துள்ளனர்.
பல பயனர்கள் வீடியோவைப் பாராட்டியும், சிலர் குழந்தைகளை இப்படி நடத்தும் முழு செயல்முறையையும் விமர்சித்தும் பதிவிட்டுள்ளனர்.
The cutest sport in the world – Crawling race for babies🍼🍼🍼pic.twitter.com/2Nzz2XSY1U
— Tansu YEĞEN (@TansuYegen) May 26, 2022