
–ந.முத்துராமலிங்கம்
நான் முதன்முதலாக 1999-ல Aircel சிம் வாங்கியது எவ்வளவுக்கு தெரியுமா? 3552 ரூபாய். இன்று இலவசமாகவே கிடைக்கும், அந்த Aircel கம்பெனி காணாமலேயே போய்விட்டது, அப்போது வாங்கிய நோக்கியா 5220 செங்கல் மாடல் மொபைல் பத்தாயிரம் ரூபாய் இருக்கும் என்று நினைக்கிறேன், இன்று அருமையான டச் போனே ரூபாய் ஐயாயிரத்துக்கு வாங்கலாம்.
எலக்ட்ரானிக்ஸ் துறையைப் பொருத்தவரை அறிமுகமாகும் பொழுது பிரம்மாண்டமாகவும் போகப்போக சாதாரணமாகவும் ஆகிவிடும்.
ஒரு காலத்தில் வெறும் கருப்பு வெள்ளை TV-க்களே ரூ. 30 ஆயிரத்திற்கு விற்றன, ஆனால் இன்று Smart TV- க்களையே வெறும் ரூ. 10 ஆயிரத்திற்கு வாங்கிவிடமுடியும்.
அதேதான் 2G அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கும் 5G அலைக்கற்றை ஒதுக்கீட்டிற்கும் உள்ள வித்தியாசம்!
வெறும், ஏழு வருடங்களுக்கு முன்புகூட வெறும் 2G அலைக்கற்றையை நம்மிடம் ஒரு GB 300 ரூபாய் என்ற கொள்ளை விலையில் விற்று வந்தனர், அதுமட்டுமல்லாமல் டாப்அப், ரேட்கட்டர் என்று விதம் விதமாகக் கொள்ளையடித்து வந்தனர். ஆனால் இவர்களெல்லாம் மோடி உருவாக்கி வளர்த்து விடுகிறார் என்று கொஞ்சம்கூட கூச்சமில்லாமல் வசைபாடும் அம்பானியின் Jio-வின் வருகைக்குப் பின்பு தான் இன்று மாதம் வெறும் 300 ரூபாயில் 560GB அதுவும் 2G அல்ல 4G டேட்டாவுடன் டாப்பப், ரேட் கட்டர் போடாமல் நாள் முழுவதும் இலவசமாகப் பேசமுடிகிறது.
அப்படியானால், மோடியின் எட்டாண்டுகால ஆட்சியில் தொலைத்தொடர்புத் துறையைப் பொருத்தவரை மக்களின் நலனே பிரதானமாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் 1998க்கு முன்பு, தான் ஆண்ட 50 வருடங்களாக சாமான்யர்களுக்கு எட்டாக்கனியாக டெலிபோன் சேவையை வைத்திருந்தது காங்கிரஸ். வீட்டுத் தொலைபேசி இணைப்பைப் பெறக் கூட எம்பி -க்களின் பரிந்துரைக் கடிதம் பெற லஞ்சம் பெற்று ஏழெட்டு வருடங்கள் காத்திருப்பில் இணைப்பு வழங்கியது காங்கிரஸ். ஆனால் அந்த அவலத்தை மாற்றி, கேட்டவுடன் தொலைபேசி இணைப்பைக் கொடுத்தவர் வாஜ்பாய். எல்லாவற்றுக்கும் மேலாக தபால்கார்டின் விலையான 50 பைசாவை விடக் குறைவாக தொலைபேசி சேவை வழங்குவது லட்சியம் என்று திருபாய் அம்பானி களம் இறங்கியது வாஜ்பாய் ஆட்சியில்! ஒருவேளை அன்று 2004ல் மக்கள் வாஜ்பாயை, பா.ஜ.க.,வைத் தோற்கடிக்காமல் இருந்திருந்தால், இன்று கிடைக்கும் இணைய சேவைகள் அன்றே குறைவாகக் கிடைத்திருக்கும் என்பதுதான் உண்மை.
ஆனால், இடையில் காங்கிரஸ் மற்றும் தி.மு.க ஆண்ட 10 வருடங்களில் மக்களை எப்படியெல்லாம் சுரண்டலாம் என்பதில் குறியாக இருந்ததால்தான் இன்று வெறும் 5 ரூபாய்க்குக் கிடைக்கும் இணையசேவையை அன்று ரூ.300க்கு விற்றுக் கொள்ளையடித்தார்கள். அதுமட்டுமல்லாமல் இன்று இலவசமாகப் பேசுவதை அன்று டாப்பப், ரேட்கட்டர் என்று கொள்ளையடித்தார்கள்.
கொள்ளையடித்த கூட்டம் இன்று 5Gயில் ஊழல் என்று கொக்கரிக்கிறது …
அன்று குறைந்த வேகமுடைய ஆனால் அதிக மதிப்புடைய 2G அலைக்கற்றையை வெறும் ரூ.9000 கோடிகளுக்கு விற்று நாட்டிற்கு ரூ.1.76,000 கோடிகள் இழப்பை ஏற்படுத்திய கூட்டம் இன்று அதிக வேகமுடைய ஆனால், குறைந்த மதிப்புடைய 5G அலைக்கற்றையை எந்தவிதமான ஊழலும் இல்லாமல் நேர்மையாக 1.66,000 கோடிகளுக்கு விற்றுச் சாதனை படைத்த மோடி அரசைப் பார்த்துக் கேள்விகள் கேட்கின்றன .
அன்று 2G-யில் நடந்தது இதுதான்…
தொலைத்தொடர்புக்குச் சம்பந்தமேயில்லாத பல நிறுவனங்கள் பின்வாசல் வழியாக உரிமம் பெற்றன. பெற்ற உரிமத்தை அடுத்த நாளே வேறு நிறுவனங்களுக்கு 500 மடங்கு லாபத்தில் கைமாற்றி விட்டுக் காசு பார்த்தன, இதற்காக லஞ்சமாக மட்டும் சில ஆயிரம் கோடி ரூபாய்களை ஆ.ராசா மற்றும் அவர் சகாக்களுக்குக் கொடுத்தன என்பது குற்றச்சாட்டு. சாஹித் பல்வாவின் ஸ்வான் டெலிகாம் நேரடியாக கலைஞர் தொலைக்காட்சிக்கு 200 கோடி ரூபாய்களைக் கொடுத்தது.
ஆனால், இன்றைய 5G ஏலத்தில் கலந்து கொண்டவைகளே வெறும் 3 கம்பெனிகள்தான்! தவிர கௌதம் அதானி தனது தனிப்பட்ட கம்பெனி தேவைகளுக்காக சிறிது அலைக்கற்றைகளை வாங்குகிறார். இதில் எங்கு ஊழல் நடக்க முடியும்?
2G – வுக்கே ஆயிரங்களில் செலவழித்த இந்தியர்களுக்கு இனிவரும் காலங்களில் 5G கூட 4Gயை விடக் குறைவாக சில நூறுகளில் கிடைக்க இருக்கிறது என்பதுதான் உண்மை.
உண்மையிலேயே இன்றும் காங்கிரஸ் ஆட்சி நடந்திருந்தால் 1GB – 2G க்கு ரூ.300 வசூலித்த காங்கிரஸார், 1GB – 5G க்கு ரூ.700 வசூலித்திருப்பார்கள்.
ஏலம் விடுவதில் கூட 2G யை ரூ. 9000 கோடிகளுக்கு ஏலம் விட்ட காங்கிரஸ், தி.மு.க 5G -யை ரூ. 23, 500 கோடிகளுக்கு மட்டுமே ஏலம்விட்டிருப்பர்.
கணக்குப் போட்டுப்பாருங்கள்!!!