தைப்பூசத்தன்று கணக்கு, வழக்கு இல்லாமல் பக்தர்களின் பணத்தில் தரமற்ற பஞ்சாமிர்தமும், லட்டுகளும் தயாரித்து அது கெட்டு போய் விட்டது
அதை தட்டிக்கேட்ட பக்தர்களை தன் ஊழியர்களை வைத்து மிரட்டிய போது தான் இந்த விவகாரம் வெளி உலகுக்கு வந்தது
இதை பழனி விசுவ ஹிந்து பரிஷத் முறைப்படி பக்தர்களை ஒன்று திரட்டி போராடிய போது அப்படி எதுவுமே இல்லை பஞ்சாமிர்தம் நன்றாக உள்ளது, சரியான முறையிலே தான் தயாரிக்கப்பட்டு உள்ளது என மழுப்பியது
இந்நிலையில் நேற்று காலை ஒரு ஈச்சர் லாரியில் சுமார் 87 பால் கேன்களில் கெட்டுப்போன பஞ்சாமிர்தத்தை எடுத்து சென்ற போது கையும் களவுமாக ஹிந்து இயக்க பொறுப்பாளர்களிடம் பிடிபட்டது
உடனடியாக காவல்நிலையத்திற்கு அந்த வாகனத்தை ஒப்படைத்த நிர்வாகிகள் அதன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் அளிக்கப்பட்டது
ஆனால் இதிலே தீடிரென பழனி ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோவில் தேவஸ்தான அதிகாரி ஹிந்து இயக்க பொறுப்பாளர்கள் 9 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்
இந்திய அரசியல் சாசன சட்டப்படி தவறு நடக்கும் இடத்தில் இந்திய குடி மக்கள் யாரேனும் அந்த தவறை தட்டி கேட்க முடியும், அது மட்டுமல்லாது அவர்கள் கெட்டுப்போன பஞ்சாமிர்தத்தை காவல்நிலையத்திலே தான் ஒப்படைத்து உள்ளனரே தவிர அவர்கள் வேறு எங்கும் கொண்டு செல்லவில்லை
இப்படி தேவஸ்தான நிர்வாகம் செய்யும் அநியாயங்களை தட்டிக்கேட்கும் ஹிந்து இயக்க பொறுப்பாளர்கள் மீது குண்டர் தடுப்புச்சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றால் திருக்கோவில் சொத்துக்களை களவாடி உங்கள் மனைவி, மக்களுக்கு நகைகள், சொத்துக்களை வாங்கி குவிக்கும் அறங்கெட்ட துறையின் அதிகாரிகள் மீது எந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்…
தட்டிக்கேட்கும் பக்தர்கள் மீதும், ஹிந்து இயக்க நிர்வாகிகள் மீதும் குண்டர் தடுப்புச்சட்டத்தில் நடவடிக்கை எடுக்க புகார் கொடுக்க சொல்லி எவர் பழனி தேவஸ்தான நிர்வாக அதிகாரியை வலியுறுத்தியது
இதற்கெல்லாம் குண்டர் தடுப்புச்சட்டம் போட முடியுமா என காவல்துறைக்கு தெரியாதா?? அவர்கள் உங்களை பார்த்து சிரிக்க மாட்டார்களா…
ஹிந்து அமைப்பினருக்கு எதிராக காவல் துறையிடம் தேவஸ்தான நிர்வாகம் கொடுத்த புகாரை நிர்வாகம் திரும்பப்பெற வேண்டும்
பழனி தேவஸ்தான அறங்கெட்ட துறையின் அநியாயத்தை கண்டித்து விரைவில் விசுவ ஹிந்து பரிஷத் (திருக்கோவில், அர்ச்சக், புரோகித்) பேரமைப்பு சார்பாக மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடத்தப்படும்
–பா.சரவணகார்த்திக்
(தென்பாரத அமைப்பாளர் – விசுவ ஹிந்து பரிஷத் | திருக்கோவில் அர்ச்சக் புரோகித் பேரமைப்பு)