தூத்துக்குடி ஆத்தூர் சோமநாத சுவாமி ஆலய பங்குனி உத்தர திருவிழா நடத்தப்பட வேண்டும்!

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் இருக்கக்கூடிய அருள்மிகு சோமநாத சுவாமி உடனுறை பரமேஸ்வரி அம்பாள் திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா நடத்திட இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து தமிழர் கட்சியின் மாநிலத் தலைவர் ராம.ரவிக்குமார் அறிக்கை ஒன்றில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில்,

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருள்மிகு சோமநாதசுவாமி சமேத சோமசுந்தரி அம்மன் திருக்கோயில் திருச்செந்தூர் செல்லும் வழியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ளது.

சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு பழமை வாய்ந்த இந்த திருக்கோயில் கொற்கை பாண்டியன் என்ற மன்னனால் கட்டப்பட்டதாகவும் பசு தானே மடியிலிருந்துபால் சுரந்து அந்த பாலே சிவலிங்கமாக மாறியதாக வரலாறு உண்டு. திருமணத் தடைகளை நீக்கி விடும் பரிகார தலம் என்று பொதுமக்கள் நம்புகிறார்கள்.

கற்சிற்பங்கள் கோவிலின் மேல் தளத்தில் இருக்கக்கூடிய கற்களில் சிற்ப வேலைபாடுகள் மிக நேர்த்தியான கோவிலாக அமைந்திருக்கிறது. கடந்த 1998 ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர் போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால், சிதிலமடைந்து காணப்படுகிறது .

சுவாமி புறப்பாடு செய்யும் வாகனங்கள் பழுது பட்ட நிலை, திருக்குளங்கள் பக்தர்கள் நீராடுவதற்கு உரிய சூழல் இல்லாமல் படித்துறைகள் பாழ்பட்டு இருக்கிறது. தற்போது குடமுழுக்கு நடத்துவதற்குரிய ஆயத்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் தொல்லியல் துறை அறநிலையத்துறையின் குழுவில் ஒப்புதல் கிடைக்கப் பெறாததால் தாமதப்படுவதால் சொல்கிறார்கள்.

அந்த சட்டமுறைகள் ஒருபுறம் இருந்தாலும் திருவிழா கொண்டாடுவதற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நடக்கக்கூடிய வழிபாட்டிற்கும் எப்பொழுதும் நடக்கக்கூடிய திருவிழா போன்ற விசேஷங்களுக்கும் அறநிலையத்துறை இதுபோன்ற காரணங்களை காண்பிப்பது வருத்தம் அளிப்பது மட்டுமல்ல; பக்தருடைய வழிபாட்டு உரிமைகள் சுதந்திரத்தில் தலையிட்டு புண்படுத்துவது போல் இருக்கிறது.

ஆகவே பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து பங்குனித் திருவிழாவில் உள்ள நடைமுறை என்னவோ அதைப்போல இந்த ஆண்டு பக்தர்கள், சிவனடியார்கள்,
ஊர் பொதுமக்கள் அனைவருடைய வேண்டுகோளுக்கு இணங்கி பங்குனித் திருவிழாவில் அருள்மிகு ஆத்தூர் சோமநாதசுவாமி உடனுறை சோமசுந்தரி அம்பாள் திருக்கோவில் நடத்திட தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோருக்கு இந்து தமிழர் கட்சியின் சார்பில் கோரிக்கையை முன்வைக்கிறோம் எல்லாம் வல்ல இறைவனின் அருளால் பங்குனி உத்திரம் திருவிழா நடைபெற இறைவனை பிராத்திக்கிறோம்… என்று கூறியிருக்கிறார்.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...