அதிமுக., தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார் ஓபிஎஸ்: முக்கிய அம்சங்கள்!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை தமிழகம்
admk executive meeting1 - 2026
File Picture

செவ்வாய்க்கிழமை இன்று முற்பகல் 11 மணி அளவில் அதிமுக.,வின் தேர்தல் அறிக்கையினை வெளியிட்டார் துணை முதல்வரும் அதிமுக., ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம். உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக.,வினர் இருந்தனர்.

மக்களவை தேர்தல் 2019 – அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ள முக்கிய அம்சங்கள்…

வறுமை கோட்டிற்குகீழ் உள்ளவர்களுக்கு மாதாந்திர நேரடி உதவி தொகையாக ரூ.1,500 வழங்க வலியுறுத்தப்படும்.

நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்

கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து

காவிரி கோதாவரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த உடனே மத்திய அரசை வலியுறுத்துவோம்.

பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க குடியரசுத் தலைவர் மற்றும் மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்

மாணவர்களின் கல்வி கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம்

விவசாய கடன் சுமையை நீக்கும் வகையில் புதிய திட்டம்.

தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு.

ஈழப் போர் குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் முறையாக விசாரணை நடத்த மத்திய அரசிடம் வலியுறுத்துவோம்.

காவிரி டெல்டா பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்துவோம் என்று அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.