இந்திய விமான போக்குவரத்து கழகத்தின் 156 காலி பணியிடங்களுக்கு 10, 12-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளிவந்து உள்ளது.
இந்திய விமான போக்குவரத்து கழகத்தில் பல்வேறு காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதன்படி, மொத்தம் 156 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பிக்கும் நடைமுறை தொடங்கியுள்ளது. இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதற்கான அதிகாரப்பூர்வ, aai.aero என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி செப்டம்பர் 30-ந்தேதி ஆகும். மொத்த காலி பணியிடங்கள்: 156 இளநிலை உதவி (தீயணைப்பு பிரிவு): 132 இளநிலை உதவி (அலுவலகம்): 10 முதுநிலை உதவி (கணக்காளர்): 13 முதுநிலை உதவி (அலுவல் மொழி): 1 கல்வி தகுதி: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எனினும், வெவ்வேறு பதவிகளுக்கு வெவ்வேறு கல்வி தகுதிகள் கேட்கப்பட்டு உள்ளன. இதுபோன்ற சூழலில், விண்ணப்பிப்பதற்கு முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை ஆய்வு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
வயது தகுதி: காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். சம்பளம்: இளநிலை உதவி (தீயணைப்பு பிரிவு) ரூ.31 ஆயிரம் முதல் ரூ.92 ஆயிரம் வரை இளநிலை உதவி (அலுவலகம்) ரூ.31 ஆயிரம் முதல் ரூ.92 ஆயிரம் வரை முதுநிலை உதவி (கணக்காளர்) ரூ.36 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வரை முதுநிலை உதவி (அலுவல் மொழி) ரூ.36 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வரையாகும்.