
தஞ்சாவூர் அருகே சிறுமியைத் திருமணம் செய்த நபரை காவல்துறையினர் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், குருங்குளம் அருகே உள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (38). இவர் தஞ்சாவூர் நகரிலுள்ள ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் 14 வயது சிறுமியைக் கந்தர்வக்கோட்டை அருகேயுள்ள கோயிலில் 2019, செப். 14-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.
இருவரும் ஒன்றாகக் குடும்பம் நடத்தி வந்தனர். இந்நிலையில், சிறுமியை பால்ராஜ் திருமணம் செய்து கொண்டது தொடர்பாக வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிலர் புகார் செய்தனர். இதன் பேரில், காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், அச்சிறுமியை பால்ராஜ் திருமணம் செய்து கொண்டு, போலியாக வயது சான்றிதழ் வாங்கி இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பால்ராஜ் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்