2 மணி நேரம் 40 நிமிடங்கள்… ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரை!

இன்று தமிழக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது! 2019 – 20 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை இன்று காலை 10 மணி அளவில் துணை முதல்வரும் நிதியமைச்சருமான – ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார்.

தமிழக சட்டப்பேரவையில் 2019-2020ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள்…

பெண் குழந்தைக் கல்வி :

பள்ளிகளில் பெண் குழந்தைகளின் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில், 3ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான பெண் குழந்தைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு ரூ.48.70 கோடி ஒதுக்கீடு!

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைக்காக ரூ.476.26 கோடி நிதி ஒதுக்கீடு

விலையில்லா வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தில் இதுவரை, 8.72 லட்சம் ஏழைப் பெண்கள் பயனடைந்துள்ளனர். 2019-2020 ஆம் ஆண்டிலும் இத்திட்டம் தொடர ரூ.198.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வரியல்லாத வருவாய் 13 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது

2019-20ல் மாநில மொத்த வருவாய் வரவுகள் 1 லட்சத்து 97 ஆயிரம் கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது

ஊதிய உயர்வினால் ஏற்படும் நிதிச்சுமை, உதய் திட்டத்தால் ஏற்படும் கூடுதல் பொறுப்பு போன்றவை தொடரும்

மின் மாநிலம், உணவு மானியம், சமூக நலத்திட்டங்களின் கீழ் வரும் ஓய்வூதியங்கள் போன்ற திட்டங்கள் தொடரும்

மொத்த வருவாய் செலவீனங்கள் 2 லட்சத்து 12 ஆயிரத்து 35.93 கோடி ரூபாயாக இருக்கும்

இதனால் வருவாய் பற்றாக்குறை 14314.76 கோடியாக இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது

மூலதன செலவுகளுக்கு அரசு எப்போதும் தனிக் கவனம் செலுத்தி வந்துள்ளது

டாஸ்மாக் மதுபான கடைகள் குறைப்பு!

டாஸ்மாக் மூலம் ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் மதுபான கடைகள் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது

மாநில ஆயத்தீர்வை போக்கினை கருத்தில் கொண்டு 7262.33 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்

முத்திரைத்தாள் கட்டண வருவாயில் நல்ல வளர்ச்சி காணப்படுகிறது

முத்திரைத்தாள் தீர்வையாக, வரும் நிதியாண்டில், 11512.10 கோடி வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்

கடந்த நிதியாண்டை விட 2000 கோடி வருவாய் அதிகம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்

வாகனங்கள் மீதான வரி வருவாய், 6510.70 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்

மாநில சொந்த வரி வருவாய் ரூ.1.26 லட்சம் கோடியாக கணிக்கப்பட்டுள்ளது

நிதி ஆதாரங்களை பெருக்க திறன்மிக்க வரி மேலாண்மை அவசியம்- ஓபிஎஸ்

மின் ஆளுமை திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்

பதிவுத்துறையில் இணையவழி பயன்பாடுக்காக நவீன மென்பொருள் பயன்படுத்தப்படுகிறது

மாநில சொந்த வரி வருவாயில் வணிக வரி முக்கியத்துவமானதாகும்

வணிக வருவாய் 2019-20ல் 96177.14 கோடியாக இருக்கும் என கணிக்கிறோம்.. என்று கூறினார் ஓபிஎஸ்.

2 மணி நேரம் 40 நிமிடங்கள் பட்ஜெட் உரையாற்றிய பன்னீர் செல்வம் பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் !

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.