உதவாக்கரை… ஸ்டாலினின் பட்ஜெட் விமர்சனம்!

Published:

stalin int - 2026

தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட் உதவாக்கரை பட்ஜெட் என்று கூறியுள்ளார் திமுக., தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்!

பட்ஜெட் குறித்து ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசியபோது…

வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்தும் தமிழக அரசு என்று பட்ஜெட் குறித்து விமர்சனம் செய்தார்.

‘‘வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்தி வருவதையே தமிழக பட்ஜெட் உணர்த்துகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான திட்டங்கள் இல்லை. வேலை வாய்ப்புக்கான திட்டம் ஏதும் இல்லை. இது ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட். வருவாயை மேம்படுத்த எந்த திட்டமும் இல்லை. வெற்று அறிவிப்பு மட்டுமே பட்ஜெட்டில் உள்ளது’’ என்று கூறினார்.

மேலும், கோடநாட்டை கொள்ளை அடித்ததை போல தமிழகத்தை கொள்ளையடிக்க ஒரு பட்ஜெட் ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்காத, உதவாக்கரை பட்ஜெட்டாக அமைந்துள்ளது! என்று கூறினார்.

Related articles

Recent articles

spot_img