பெண்ணிடம் செயின் பறிக்க முயன்றவருக்கு தர்ம அடி

உள்ளூர் செய்திகள் நெல்லை

நாகர்கோவில்

நாகர்கோவிலை அடுத்த பார்வதிபுரம் கட்டையன்விளை பகுதியில் உள்ள சந்தையில் பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தார் அகிலா என்ற பெண். அவரை நோட்டம் விட்ட பெருமாள் என்ற நபர், திடீரென அவரைத் தாக்கினான். பின் அகிலா கழுத்தில் போட்டிருந்த 11 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு தப்பியோட முயன்றான். இதனை கவனித்த பொதுமக்கள்,  பெருமாளை விரட்டிப்பிடித்தனர். அவனுக்கு தர்ம அடி கொடுத்து, பின்னர் அவனை போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.