health tips - 2026

அப்பாச்சி தீர்வு: இரும்பு சத்துக்கு, கர்ப்பிணி, காது இரைச்சல், தொழுநோய், தொண்டைப்புண்..!

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips - 2026

இரும்புச் சத்து குறைவு

ஆட்டுப்பால் உடலுக்கு மிகவும் நல்லது. ஆட்டு ஈரலில் இரும்புச் சத்தும் புரதச் சத்தும் அதிகம் உள்ளது. கல்லீரல் குறைபாட்டையும் குணப்படுத்தும். சைவ உணவு உண்பவர்கள் உருளை, வாழைக்காய், வாழைத்தண்டு, பூசணி, வெங்காயம், வெள்ளைப்பூண்டு. தக்காளி மற்றும் பருப்பு வகைகளையும் பாகற்காய், சுண்டைக்காய் முதலிய வற்றையும் அவ்வப்போது உணவில் சேர்த்து வர உடம்பு இரும்பு போல் உறுதியாகும்.

பேரிக்காயின் மகத்துவம்

கர்ப்பிணிப் பெண்கள் கர்ப்பக்காலத்தில் பேரிக்காய் சாப்பிட்டு வர பிறந்த குழந்தைக்கு பால் இல்லையே என்ற பிரச்சினையே எழாது. கருவிலிருக்கும் குழந்தையின் எலும்புகள் மற்றும் இதயம் வலுவுடன் வளர பேரிக்காய் மிகவும் உதவுகிறது.

தொழுநோய் பரவாமலிருக்க…

மருதோன்றி பூக்களையும் இளந்தளிர்களையும் சாறு பிழிந்து காலை. மாலை அரைதேக்கரண்டி சாப்பிட்டு வர தொழுநோய் வந்தவர்கள் அதனை மேலும் பரவாமல் தடுத்துக் கொள்ளலாம்.

காதில் இரைச்சலா?

தைவளை என்ற மூலிகையை இடித்துச் சாறெடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்துக் கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக் கொண்டு இரண்டு சொட்டுக்கள் காதில் விட்டு வர இரைச்சல் சரியாகி விடும்.

தொண்டை புண்ணுக்கு…

வறட்டு இருமலில் அவதிப்படுபவருக்கு தொண்டைப் புண்ணாக வலிக்கும். நறுக்கிய வெண்டைக்காயை கொதிநீரில் போட்டு அதன் ஆவியை நுகர்ந்தால் தொண்டை வலி குறையும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.