தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை விசாரிக்கும் அருணா ஜெகதீசன் ஆணைய பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந் தேதி நடந்த துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை ஆணையத்தின் பதவிக்காலத்தை மே 25ம் தேதி வரை நீட்டித்து தமிழ்நாடு அரசு இன்று அரசாணை வெளியிடப்பட்டது.
நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில் மேலும் 3 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது .




