
கார்த்தீகை தீபம் ஏற்ற அனுமதி வழங்காத தமிழக அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்த ஹிந்து முன்னணி அழைப்பு விடுத்திருந்தது . இதன்படி தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் ஹிந்து முன்னணி அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர் . அவர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து மதுரை பழங்காநத்தம் பகுதியில் ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை, திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுத்ததைக் கண்டித்து வரும் 7-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக இந்து முன்னணி அறிவித்திருந்தது. இந்த நிலையில், மதுரை பழங்காநத்தம் அருகே, ஆர்ப்பாட்டம் நடத்துவதற்காக இந்து இந்து முன்னணி தொண்டர்கள் குவிந்திருந்தனர். 50 பெண்கள் உள்பட 300 பேர் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மாநகர காவல் உதவி ஆணையர் கணேசன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் இந்து முன்னணி அமைப்பினரிடம் ஆர்பாட்டம் நடத்த அனுமதி இல்லை என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமலும் , அதற்கு அனுமதி வழங்காததைக் கண்டித்தும் தமிழக அரசை கண்டித்து ஹிந்து முன்னணி அமைப்பினர் மாநிலம் முழுவதும் இன்று போராட்டம் நடத்தினர் .
திருச்சியில்:
திருச்சி , மரக்கடை பகுதியில் , ஹிந்து முன்னணி அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி இல்லாததால் , மரக்கடை பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மட்டுமின்றி அந்தப் பகுதியில் வந்தவர்களையும் போலீசார் வேனில் ஏற்றினர் . ஹிந்து முன்னணி மற்றும் பாஜக.,வினர் கோஷமிட்டபடி வந்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினர்.
கோவையில்…
தமிழக அரசை கண்டித்து கோவையில், ஹிந்து முன்னணி மற்றும் ஹிந்து மக்கள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி இல்லாததால், அவர்களை போலீசார் கைது செய்தனர் . செட்டி வீதி சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற ஹிந்து மக்கள் கட்சியினர் , சாலையில் அமர்ந்து , ‘தி.மு.க,வை தடை செய்ய வேண்டும்’ என கோஷமிட்டனர். தொடர்ந்து ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் உட்பட, நாற்பதுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர் .
சென்னையில்:
சென்னையில் கோயம்பேடு நூறு அடி சாலையில் , ஹிந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் இளங்கோவன் தலைமையில், கனல் கண்ணன் , பாஜக,, மன்ற உறுப்பினர் உமா ஆனந்தன் உள்பட இருநூறு க்கும் மேற்பட்டோரை அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக போலீசார் கைது செய்தனர். சிலர் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வந்த பேருந்தை வழி மறித்து மறியலில் ஈடுபட்டனர். அவர்ளையும் போலீஸார் கைது செய்தனர் .




