தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்துள்ள நிலையில் தேர்தல் நடைமுறைகள் விலக்கிக்கொள்ளப்பட்டது.
தமிழக தேர்தல் ஆணையம் இது குறித்து புதன் கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தமிழகத்தில் கடந்த 19-ந் தேதியன்று நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல்கள் நடைமுறைகளை (கடலூர் மாவட்டம், புவனகிரி பேரூராட்சி பகுதியை தவிர) தொடர்ந்து, தேர்தல் மாதிரி நடத்தை விதிகள் உடனடியாக விலக்கிக் கொள்ளப்படுகிறது என தமிழக தேர்தல் ஆணையர் பழனிகுமார் அறிவித்துள்ளார்.




