இமய மலையில் ‘ஆன்மிக அரசியல்’ தென்றல்

இந்தியா சற்றுமுன் சென்னை

IMG 20180310 WA0055 - 2026

இமாச்சல பிரதேசத்தின் பைஜ்நாத் கோயிலில் ரஜினிகாந்த் வழிபாடு மேற்கொண்டார்..

நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை இமயமலை செல்வதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில் மாலை அவர் இமயமலை சென்று அடைந்தார்.  அவருக்கு பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், இமாச்சலப் பிரதேசம் சென்ற ரஜினிகாந்த் பைஜ்நாத் ((Baijnath)) என்ற இடத்தில் உள்ள பழமையான பைஜ்நாத் சிவாலயத்தில் வழிபாடு நடத்தினார். ஆன்மீக அரசியல் குறித்து பேசி வரும் ரஜினிக்கு இந்த பயணம் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இமயமலை புறப்பட்டுச் சென்ற நடிகர் ரஜினிகாந்த், இமாச்சலப் பிரதேசத்தில் வழிபாடு நடத்திய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து அதிகாலையில் புறப்பட்ட அவர், இமயமலை சென்று நீண்டநாளாகிவிட்டதால், தற்போது அங்கு செல்வதாக தெரிவித்தார்.

சென்னை விமான நிலையத்திலும் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், குறைந்தபட்சம் 15 நாட்கள் இமயமலையில் தங்கியிருக்க உள்ளதாக கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.