Homeஅரசியல்அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணாக செயல்படும் தவெக., அரசு: இந்து முன்னணி கண்டனம்!

அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணாக செயல்படும் தவெக., அரசு: இந்து முன்னணி கண்டனம்!

அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக செயல்படும், த.வெ.க அரசுக்குக் கண்டனம் தெரிவிப்பதாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

kadeswara subramaniam hindu munnani - 2026

அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக செயல்படும், த.வெ.க அரசுக்குக் கண்டனம் தெரிவிப்பதாக, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் அறிக்கை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கை:

மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் தர்க்காக்களுக்கு சொத்துரிமை ஆவணங்கள் இல்லாத பட்சத்திலும், நில பட்டாக்களை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. உரிய நில உரிமை ஆவணங்கள் இல்லாத போதும் அரசு நிலங்களை சிறுபான்மை ஓட்டுக்காக தாரை வார்க்கும், இந்தத் தகவலை சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

அரசு மற்றும் பொது சொத்துக்களை ஆக்கிரமித்தவர்களிடமே ஒப்படைப்பது என்பது அரசியலமைப்பு சட்ட நெறிமுறைகளை மீறுவதாக அமையும். ஏற்கெனவே தமிழகத்தின் பல பகுதிகளில் சட்டவிரோதமாக தேவாலயங்கள், மசூதிகள், தர்காக்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் கூட, கடந்த 10 ஆண்டுகளில் அதிகமான சிறுபான்மை வழிபாட்டுத் தலங்கள் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது.

பல பகுதிகளில் இந்துக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் கூட, இது போன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன்மூலம் பல இடங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. அரசு நிலங்களை வேறு யாரேனும் தனி நபர் ஒருவர் ஆக்கிரமிக்கும் பட்சத்தில் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசாங்கமே ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணை போவதையே இது காட்டுகிறது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அரசு நிலங்களில் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களுக்கு சட்ட ரீதியிலான அதிகாரம் வழங்கப்படவில்லை. நீதிமன்றங்களும் ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களை மீட்கவும், கட்டடங்களை இடித்துத் தள்ளவும் பல வழக்குகளில் உத்தரவிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு நிலங்களுக்கான‌ பிரச்சனைகளில், நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சங்களை அறியாமல் த.வெ.க அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது, மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பபை ஏற்படுத்தியுள்ளது. இந்து கோவில்கள் அரசாங்க நிலங்கள், நத்தம் புறம்போக்குகள் மற்றும் நீரோடை பகுதிகளில் அமைந்திருந்தால் அதை உடனே இடித்துத் தள்ளுகின்ற அரசாங்கம் மசூதி, சர்ச்சுகளுக்கு மட்டும் அரசாங்க நிலத்தை வழங்குவது எந்த வகையில் நியாயமாகும்.

குறிப்பாக ஏற்கனவே முஸ்லீம்களின் வக்ஃப் சொத்துக்கள் என்ற பெயரில் சில மாவட்டங்களில் இந்துக்கள் தங்களது சொந்த நிலத்தை கூட விற்க, வாங்க முடியாமல் தவித்து வருகின்றனர். கரூர் மாவட்டம், திருச்செந்துறை, ஈரோடு மாவட்டம் பவானி போன்ற பல பகுதிகளில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றையெல்லாம் கண்டு கொள்ளாத த.வெ.க அரசு அவசர கதியில் சிறுபான்மை வழிபாட்டு தலங்களுக்கு பட்டா வழங்குவது இந்துக்களுக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதியாகும்.

அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் பல சலுகைகளை வழங்கி சிறுபான்மையினருக்கு மட்டும் ஆதரவாக நடந்து கொள்கிறது. வாக்கு வங்கி அரசியலுக்கும் ஒரு எல்லை உண்டு. மதசார்பற்ற அரசாங்கம் என தாங்கள் சொல்லிக் கொண்டதை மறந்து செயல்படும் த.வெ.க அரசு உரிய ஆவணங்கள் இன்றி அரசு ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களுக்கு பட்டா வழங்கும் உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

இது போன்ற சட்ட விரோதமான போக்கை இந்த அரசாங்கம் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular