ஒரு லிட்டர் கேட்டா… 650 மிலி., கொடுத்தான்! ரவுண்டு கட்டிட்டாங்க பெட்ரோல் பங்க்க..!

Reporters Diary அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்

odissa petrol punk - 2026

எரிபொருள் மேட்டர் எங்கே போய் முடியுமோ தெர்ல..! பெட்ரோல் டீசல் விலை தாறுமாறா போய்கிட்டு இருக்குற நேரத்துல.. மும்பைல 91 ரூவாய தாண்டிடிச்சு. சென்னையில 87.24 .., டீசல் கிட்டத்தட்ட 80 ரூபாய்..

இந்தக் கொடுமை இப்படி போய்க்கிட்டிருக்கும் போது… இன்னொரு கொடுமை,

பெட்ரோல் பங்குல, ஒரு லிட்டருக்கு கால் லிட்டரு பெட்ரோல திருடுற பொறம்போக்குத்தனம்தான் அந்தக் கொடுமை!

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஒடிசா மாநிலமே அல்லோலகல்லோலப் பட்டுப் போச்சி. ஒரிசாவோட பூரி நகர்ல, பாட்டில் கேன்ல்ல ஒரு லிட்டர் பெட்ரோல் போடச் சொல்லி கேட்டுருக்காரு ஒருத்தரு. ஆனா அதுல 650 மி.லி., தான் பெட்ரோல் வந்திருக்கு. அப்புறமென்ன. கடுப்பாயிட்டாரு அத ஆளு.

பக்கத்துல இருந்த உள்ளூர்க்காரங்க… எங்களையும் இப்படித்தான் ஏமாத்தினீங்களா அப்டின்னு கேட்டு, பெட்ரோல் பங்க்குக்கு சிறப்பு வழிபாடு செய்ய ஆரமிச்சிட்டாங்க. அவங்க ரவுண்டு கட்டினதுல, பெட்ரோல் பங்கு நாசமாச்சு. தகவல் அறிந்து ஓடியாந்தாங்க.. போலீஸு காரங்க.

பிறகென்ன…? லத்திசார்ஜ் தான். தடியடி நடத்தினதுல பல பேருக்கு காயம். இந்த நிகழ்ச்சிய படம் புடிக்கலாம்னு அங்க போன பத்திரிகை ஊடகங்காரங்க பலருக்கும் காயம், படுகாயம்.

அப்புறமென்ன..?! கலெக்டரு ஒரு குழுவை அனுப்பி, பெட்ரோல் டீசல் அளந்து பார்த்து அறிக்கை அனுப்புற மாதிரி புவனேஸ்வரத்துல இருந்து புரி நகரத்துல எல்லா பங்குக்கும் அனுப்பி வெச்சிருக்காரு.

இந்த களேபரத்துல, சமூக வலைத்தளங்கள்ல இந்த வீடியோவ பகிர்ந்துகிட்டு…. பெட்ரோல் விலை உயர்வு கண்டு கோபத்துல மக்கள் பெட்ரோல் பன்க்க்க உடைச்சி எறிஞ்சிட்டாங்கன்னு கேப்ஷன் போட்டு செய்திய பரப்பிக்கிட்டிருக்காங்க!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.