spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?டியர் மிஸ்டர் விடியல்..! மண்டை... மண்டையில் உள்ள கொண்டை பத்திரம்!

டியர் மிஸ்டர் விடியல்..! மண்டை… மண்டையில் உள்ள கொண்டை பத்திரம்!

- Advertisement -
rn ravi as tn governor
rn ravi as tn governor

“இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்படுவோர் மண்டை பத்திரம்”
– விடியலுக்கு ஒரு மடல்…

டியர் மிஸ்டர் விடியல்,

69 வயதாகும் ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ரவீந்திர நாராயண் ரவி (ஆர். என். ரவி) இன்று சென்னை வந்து சேர்ந்தார் – தமிழகத்தின் 15ஆவது கவர்னராக பொறுப்பேற்க.

அவர் நாகாலாந்திலிருந்து கிளம்பியதற்கு, அவரால் வெகுவாக பாதிப்படைந்த நாகாலாந்து அரசியல்வாதிகள் மிகுந்த சந்தோஷத்தை வெளியிட்டிருக்கிறார்கள் என உமது சகோதரி ஆட்சி செய்யும் மவுண்ட் ரோடு மாவோ பத்திரிக்கை செய்தி வெளியிட்டிருக்கிறது.

நாகாலாந்து அரசியல்வாதிகள் ஏன் கடுப்பானார்கள் என்பதற்கு சில காரணங்களையும் மாவோ பத்திரிக்கை கூறுகிறது:

1, நாகாலாந்தை ஆளும் NDPP கட்சி தலைவர், “ரவி அரசு விவகாரங்களில் தலையிட்டார். அவர் இங்கிருந்து போவது எங்களுக்கு சந்தோஷம்” என்று கூறியிருக்கிறார்.

2, ஜூன் 2020இல் நாகா முதல்வருக்கு அவர் ஆட்சியில் பல குழுக்கள் ஆட்டம் போடுவது பற்றி காரசாரமாக கடிதம் எழுதி கடுப்பேத்தியிருக்கிறார் ரவி.

3, பிப்ரவரியில் நாகாலாந்து தலைமை செயலருக்கு, “நாகா அரசு அலுவலர்களின் குடும்ப உறுப்பினர்கள், உறுப்பினர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய டேடாபேஸ் ஒன்றை உருவாக்கவும் என உத்தரவிட்டிருக்கிறார்.

4, அது மட்டுமல்லாமல், பிப்ரவரியில் அவர் விட்ட சுற்றறிக்கையில், “சமூக வலைதளங்களில் பிரிவினைவாத பதிவுகள் மற்றும் நாட்டின் இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் எதிராக பதிவுகளை அரசு ஊழியர்கள் பதியக் கூடாது” என உத்தரவு போட்டிருக்கிறார்.

5, இரு பிரிவினைவாத குழுக்களிடையே பேச்சு வார்த்தை நடத்திய ரவி ஐபிஎஸ், ஒரு குழுவிடம் மென்மையாகவும், மற்றொரு குழுவிடம் கடுமையாகவும் பேசியதால், மென்மையாக பேசிய குழுவும் கடுமையாக பேசிய குழுவும் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்கிறார்களாம். அவர்களே அடித்துக் கொண்டு செத்தால், “லா & ஆர்டர் பிரச்சினை”. அரசு செய்தால் அது “மனித உரிமை மீறல்”.

இப்படி பல முக்கியமான விவரங்களை பகிர்ந்து பயம் காட்டுகிறது மவுண்ட் ரோடு மாவோ பத்திரிக்கை.

rn ravi
rn ravi

இது தவிர… அவர் உளவுத்துறையில் பணி புரிந்தார், அஜித் டோவலில் டெபுட்டி, 2012இல் ஓய்வு பெற்றவரை இழுத்துப் பிடித்து பிரிவினைவாதம் பேசி வந்த நாகாலாந்தில் நரேந்திர மோதி 2014இல் நியமித்தார்… ‘பேச்சுவார்த்தைக்காக’

2015இலேயே முதல் ஒப்பந்தத்தை கையெழுத்திட வைத்தார் ரவி ஐபிஎஸ். அதன் பிறகு அங்கே இரு ஆண்டுகளாக கவர்னாக இருந்து அரசு எந்திரத்தை சுத்தம் செய்தார்… அசுத்தமானவர்கள் கடுப்பானார்கள், சமீபத்தில் மேலும் பல பிரிவினைவாத கூட்டங்கள் சரணடைய இவரே காரணம் என்பதெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்கலாம்… (தெரியாவிட்டால் இப்போதாவது தெரிந்து கொள்ளுங்கள்).

இப்படிப்பட்டவரை அமித் ஷாதான் தேர்ந்தெடுத்து தமிழ் நாட்டுக்கு அனுப்பியிருக்கிறாராம் – மோதி இல்லை!

அதிமுக காலத்தில் நீங்கள் உபயோகித்த ‘போராளி’க் கூட்டத்துக்கு மீண்டும் வேலை வந்து விட்டது. அய்யாக்கண்ணு கோவணத்தை துவைத்துக் கொடுத்து ராஜ் பவன் பக்கம் அனுப்பி வைக்கவும். துவைக்கவில்லை என்றால், நாய் ‘கவ்வும்’. அப்புறம் சு.வள்ளியை இரவு நேரத்தில் அங்கே அனுப்ப வேண்டாம். ஆம்னி பஸ் அங்கே வராது. பூவுலகு கேப்மாரிகள், “ராஜ் பவனில் மரங்களுக்கு தண்ணீர் ஊற்றாததால் உலகம் வெப்பமாகிறது” என்று ஏதாவது பேனர் பிடிக்க சொல்லுங்கள்.

  • செல்வநாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe