நீங்கள் யாரிடமாவது சன்மானம் பெறுவது போல் கனவு கண்டால், உங்களால் மட்டுமே எதையும் செய்ய முடியும் என்று பெருமையாய் நினைத்து கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டு உங்களால் செய்ய முடிந்த காரியத்தை மட்டுமே செய்ய வேண்டும் என பொருள்.
விவசாயியை கனவில் கண்டால் செய்யும் காரியம் வெற்றியில் முடியும் என்பதைக் குறிக்கிறது.
தான் மட்டும் தனித்து உணவு உண்பது போல் கனவு கண்டால் துன்பங்கள் உண்டாகும் , உறவினர்களை பிரிய நேரிடும்.
வைத்தியம் செய்பவரை கனவில் கண்டால் தனலாபம் கிட்டும்.
விதவையை கனவில் கண்டால் உயர் பதவிகள் கிடைக்கும்.
யாருடனாவது வாக்குவாதம் அல்லது சண்டையிடுவதுபோல கனவு கண்டால் புதுப்புது நண்பர்கள், உறவுகள் வரப் போவதன் அறிகுறியாகும்.
மாமனார் உங்களுடைய கனவில் வந்தால் சோர்ந்து போயிருக்கும் உங்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு நல்ல செய்தி வரப்போகிறது என்பதைக் குறிக்கும்.
மாமியார் உங்களுடைய கனவில் வந்தால் பொறுமையாகவும், எச்சரிக்கையாகவும் எல்லாவற்றிலும் செயல்பட வேண்டும் என்பதைக் குறிக்கும்.
மற்றவர்கள் சிரிப்பது போல் கனவு கண்டால் யாரிடமும் ஆலோசனை கேட்காமல் நீங்களே புத்திசாலிதனமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதைக் குறிக்கும்.
நீங்கள் யார் மீதாவது கோபப்படுவது போல் கனவு கண்டால் உங்களுடைய செல்வாக்கு உயர்ந்தாலும் உங்களுடைய புதிய முயற்சி தோல்வி அடையப்போகின்றது. அதை தள்ளிப்போடுவது புத்திசாலித்தனம் என்பதைக் குறிக்கும்.