TANGEDCO நிறுவனத்தில் பணி! 10 ஆம் வகுப்பு போதும்!

தமிழகம் வேலைவாய்ப்பு
tneb
tneb

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழக அரசு மின்வாரியத்த்தில் (TNEB) துணை நிறுவனமாக செயல்பட்டு வரும் TANGEDCO நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அணுப்பலாம்.

இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு பாடத்திட்டங்களின் கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கபட்டுள்ளது.

மேலும் இந்தப் பணியில் சேருவதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த Instrument Mechanic பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.6,000 முதல் அதிகபட்சம் ரூ.7,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பத்தாரர்ளுக்கு வயது வரம்பு இருக்க வேண்டியது அவசியம் இல்லை குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த Instrument Mechanic பணிகளுக்கு மொத்தம் 2 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

மேலும் விரங்களுக்கு: https://apprenticeshipindia.org/

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.