உரத்த சிந்தனை ஆரிய நாடு- ஆரிய இனம்! திராவிட நாடு- திராவிட இனம்! இல்லாததும்...

ஆரிய நாடு- ஆரிய இனம்! திராவிட நாடு- திராவிட இனம்! இல்லாததும் பொல்லாததும்!

-

- Advertisment -

சினிமா:

சிவனுடன் சக்தியாக… நயன்தாரா!

நடிகை நயன்தாரா திருச்செந்தூர் முருகன் கோவிலில் போலீஸ் பாதுகாப்புடன் சுவாமி தரிசனம் செய்தார்!

வலிமையில் தலைக்கு ஜோடி இவர்தான்!

அஜித்துக்கு ஜோடியாக நடிக்க பாலிவுட் ஹீரோயின்கள் சிலரிடம் பேசி வந்தனர். நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடித்தார். இதே போல அங்குள்ள முன்னணி நடிகை ஒருவர் அஜித் நடிகையாக நடிப்பார் என்று கூறப்பட்டது.

கன்னியாகுமரியில் நயன்தாரா, காதலனுடன் சாமி தரிசனம்!

இதற்காக நேற்று கன்னியாகுமரி வந்த அவர் பகவதி அம்மன் கோவிலுக்கு தன் காதலன் விக்னேஷ் சிவனுடன் சென்று சாமி தரிசனம் செய்தார்.

முதல்வரை காணச் சென்ற பாரதிராஜா! காணாமலே திரும்பினார்.. காரணம்?

தமிழ் சினிமாவில் தனது இசை மூலம் தமிழ் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் பரப்பி வளர்த்ததோடு அதை உலகறியச் செய்த இளையராஜாவை தமிழக அரசு கௌரவிக்கும் வகையில் அரசாங்கத்தின் சார்பில் சென்னையில் இளையராஜாவுக்கு ஒரு காலி இடத்தை கொடுத்து அதில் அவர் ஸ்டுடியோ கட்டிக்கொள்ள அனுமதிக்க வேண்டும்
-Advertisement-

மீனாட்சி மீனாட்சி..! என்னாச்சி என்னாச்சி?!

ன் பாட்டுக்கு செவனேன்னு திருவண்ணாமலையில் சுத்திக்கிட்டிருந்தேன்... என்னை ஏண்டா இவ்ளோ பெரிய ஆளாக்கினீங்க என்று கேட்கிறார் நித்தியானந்தா

அறநிலையத் துறையில் ‘கிறிப்டோ கிறிஸ்துவர்’! என்ன நாசவேலை நடக்குது பாருங்க..!

இந்து அறநிலைத் துறையில் துணை ஆணையராக வேலை செய்கிறேன்! வேலை பார்க்கும் இடம், நாமக்கல் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில். சர்டிஃபிகேட் படி நான் ஹிந்து தான். உங்களால என்னைப் போன்றவர்களை ஒன்னும் செய்ய முடியாது.

சாரி… சிதம்பரம் பிரஸ்மீட்ல இந்தக் கேள்விய எல்லாம் கேட்க முடியல… அதுக்காக மன்னிச்சிருங்க!

கேள்விகளை எல்லாம் அவர் முன் வைத்து கேட்க வேண்டும் என்ற ஆசைதான்! ஆனால் என்னைச் சுற்றிலும் இருக்கும் ஜால்ரா ஊடகப் பெருமக்கள் என்னை கீழே அழுத்தி ஏறி மிதித்து என் குரல்வளையை நெரித்து, பத்திரிகை சுதந்திர மற்றும் ஜனநாயக முறைப்படி நெறிமுற தவறாமல் பத்திரிகையாளர் சந்திப்பை ஆக்கிவிட்டதால்...

என்கவுண்டரில் நீதி கிடைக்காது: வரங்கல் ஆசிட் வீச்சில் பாதிக்கப் பட்ட பெண் கருத்து!

தவறு செய்தாலும் தம்மை யாரும் பிடிக்க மாட்டார்கள். ஒருவேளை பிடிபட்டாலும் பெயிலில் வெளியே வந்துவிடலாம் என்ற குருட்டு தைரியத்தில் தான் நிறைய பேர் குற்றம் செய்ய முன் வருகிறார்கள் என்று கருத்துக் கூறினார் பிரணிதா.

நோட்டாவிடம் தோற்ற வாட்டாள்: தமிழர்கள் நிம்மதி

நோட்டாவிற்கு 986 ஓட்டுகள் கிடைக்க, நாகராஜூக்கு 255 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன.

திருவண்ணாமலையில் அரோகரா கோஷம் முழங்க… ஏற்றப்பட்டது மகாதீபம்!

திருவண்ணாமலையில் மகா தீபத் திருவிழாவையொட்டி 2,668 அடி உயர மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது .

என்கவுண்டரை பாராட்டி… பின்… கட்சிக்காக பின்வாங்கி… அதான் கம்யூனிஸ்ட்!

என்கவுன்ட்டர் குறித்து தான் கூறிய கருத்துக்கு சிபிஐ தலைவர் மன்னிப்பு கோரினார். சிபிஐ., தேசியச் செயலர் நாராயணா தெலங்காணா போலீசாரின் என்கவுன்டர் மீது செய்த விமர்சனத்திற்கு மன்னிப்பு கேட்டார்.

என்கவுண்டர் விவகாரத்தில்… தெலங்கானா முதல்வரை ‘ஓவராக’ப் புகழ்ந்த ஜெகன்!

கேசிஆர் திடமுள்ள முதல்வர் என்று ஆந்திர மாநில சட்டமன்றத்தில் முதல்வர் ஜெகன் மோகன் புகழ்ந்துரைத்தார்.

ஹோட்டல்களில் பொது நுழைவு வாயில் சவூதி அரசு அதிரடி அறிவிப்பு.!

இதன் மூலம் வெவ்வேறு நுழைவாயில் என்னும் நடைமுறை முடிவுக்கு வந்து ஆண்கள் பெண்கள் இருபாலரும் பொது வழியை பயன்படுத்த வழி செய்யப்பட்டுள்ளது.

குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு எதிர்த்து வாக்களிக்க வேண்டும் ஜவாஹிருல்லா கெஞ்சல்.!

அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான, மக்களிடையே பாரபட்சத்தைப் பாராட்டுகின்ற, இலங்கைத் தமிழர் நலனுக்கு விரோதமான இச்சட்டத்தைத் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்த்து பாராளுமன்றத்தில் வாக்களிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

சிவனுடன் சக்தியாக… நயன்தாரா!

நடிகை நயன்தாரா திருச்செந்தூர் முருகன் கோவிலில் போலீஸ் பாதுகாப்புடன் சுவாமி தரிசனம் செய்தார்!

கடைசியா உன்னுடன் ஒரே ஒரு நாள் மட்டும் கெஞ்சியவன் செய்த விபரீத செயல்.!

இந்த விசாரணையில் அமலசெல்விக்கும், கொத்தனார் கண்ணனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கண்ணனிடம் விசாரணை செய்தபோது கள்ளத்தொடர்பு குறித்து ஒப்புக்கொண்டார்.

உரிமைக்குரல் தொழிற்சங்க கூட்டத்தில் டீசல் விலை உயர்வை கட்டுபடுத்த கோரி தீர்மானம்.!

சொந்த பயன்பாட்டிற்கென வாங்கி வாகனங்களை வாடகைக்கு பயன்படுத்துவதை தடை செய்திட வேண்டும். 2. டீசல் விலைஉயர்வு, இன்சூரன்ஸ் உயர்வை கட்டுப்படுத்தவும்

ஐ.எஸ்.இயக்கத்துக்கு ஆதரவாக ரகசிய பயிற்சி வகுப்புகள் நடத்திய முஸ்லீம் இளைஞர்கள்.!

ஐ.எஸ். இயக்கத்தின் கொள்கைளை முஸ்லீம் இளைஞர்கள் மத்தியில் பரப்பி, அந்த இயக்கத்துக்கு ஆள் திரட்ட மற்றும் ஆதரவாக செயல்பட ரகசிய பயிற்சி வகுப்புகள் கோவையில் நடந்துள்ளன
- Advertisement -
- Advertisement -

ஆரிய நாடு ஆரிய நாடுன்னு எங்காச்சும் இருக்கான்னு தேடிப் பாத்தேன்… ஆனா, திராவிட தேசம்னு பழங்கால நாடு இருந்ததா தெரியவருது! அதுக்குப் பேருதான் திராவிட நாடு. திராவிட நாடு இருந்துது ஆனா திராவிட இனம்னு ஒன்னும் கிறிஸ்துவ பாதிரிகள் வருவதற்கு முன்னே இங்கே இல்லை…

பண்டைய பாரத பூமி, 56 தேசங்களாக பிரிக்கப் பட்டிருந்தது. ஒவ்வொரு தேசத்தையும் ஆள்பவர்கள் வேறு வேறு. அவர்கள் மொழி, உணவுமுறை, உடை உடுத்தும் தன்மை, பழக்க வழக்கங்கள், இயல்பு எல்லாம் வேறு வேறு. ஆனால், கலாசாரத்திலும், பண்பாட்டிலும் ஒன்றாகவே இருந்தார்கள். அவர்களைப் பிணைத்தது, ராமனும் கண்ணனும், சிவனும் அம்பிகையும்! நாளும் நட்சத்திரமும், கோளும் குணங்களும்!

அப்படின்னா… ஆரிய என்று சொல்லுக்குப் பொருள்?
ஆர்ய எனில்… கல்வியிற் சிறந்தவன்னு பொருள்! குணத்தில் உயர்ந்தவன்னு பொருள்! மேம்பட்டவனை ஆர்ய என்றும், மேம்பட்டவர்கள் அரசு புரிவதை ஆர்ய ஆட்சி என்றும் கவிஞர்களும் புலவர்களும் பாடல்களில் போற்றி வைத்தார்கள்!

வாழிய செந்தமிழை எத்தனை இடங்களில் நாம் பாடியிருப்போம்…
எத்தனை கூட்டங்கள் முடிந்ததும், நாட்டுப் பண் எனும் அளவில்!

வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய பாரத மணித் திருநாடு
வந்தே மாதரம் ! வந்தே மாதரம்! வந்தே மாதரம் என்று சொல்லி முழங்கிவிட்டுப் போய்க் கொண்டிருப்போம்.
ஆனால், இந்த வரிகளின் முன்னும் பின்னும் அறிவோமா?

பாரதியே கைகொடுக்கிறார்!
நண்பர் ஒருவரின் பேஸ்புக் பதிவில் எப்போதோ கண்டது…


பாரதியார் பாடல்

””ஆன்ற மொழிகளுக்குள்ளே – உயர்
ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன் ””.

சீரிய சிந்தனை !

நேரிய பார்வை !

வீரிய உணர்வு !

பாரிய நோக்கு !

கூரிய மதி ! படைத்த பாரதியின் பாடல்களில் ஆரிய எனும் பிராமண வெறியா …. சமஸ்கிருதப் பற்றோ… ?

இதோ பாரதிதம் ‘ஆரிய’ பாடல்கள் :

1.தமிழ்த் தாய் பாடலில்……………..
ஆதி சிவன் பெற்று விட்டான் – என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தெ – நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்

2.ஆன்ற மொழிகளினுள்ளே – உயர்
ஆரியத்திற்கு நிகரென வாழ்ந்தேன்

ஆரிய நாடு எது?

3.பாரத தேவியின் திருத் தசாங்கம் பாடலில்…….
பேரிமய வெற்பு முதல் பெண் குமரி ஈறாகும்
ஆரிய நாடென்றே அறி

ஆரியர் யார்?

4.சங்கு என்ற பாடலில்………………
பொய்யுறு மாயையை பொய்யெனக் கொண்டு
புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே
ஐயுறவின்றிக் களித்திருப்பவராவர்
ஆரியராம் என்று இங்கூதேடா சங்கம்!

5.பாஞ்சாலி சபதப் பாடலில்…………………
ஆரிய வேல் மறவர் – புவி
யாளுமோர் கடுந்தொழில் இனிதுணர்ந்தோர்
சீரியல் மதிமுகத்தார் – மணித்
தேனிதழ் அமுதென நுகர்ந்திடுவார்

6.வாழிய செந்தமிழ் பாடலில்…………………..
அறம் வளர்ந்திடுக ! மறம் மடிவுறுக!
ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்து மிக்கோங்குக!

பாரத மாதா= ஆரிய மாதா

7.பாரத மாதா என்ற பாடலில்…………………….
முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்தவில் யாருட வில்? – எங்கள்
அன்னை பயங்கரி பாரத தேவி நல்
ஆரிய ராணியின் வில்

சித்தமயம் இவ்வுலகம் உறுதி நம்
சித்தத்தில் ஓங்கிவிட்டால் – துன்பம்
அத்தனையும் வெல்லலாம் என்று சொன்ன சொல்
ஆரிய ராணியின் சொல்

8.தாயின் மணிக்கொடி என்ற பாடலில்………………….
அணி அணியாயவர் நிற்கும் – இந்த
ஆரியக் காட்சி ஓர் ஆனந்தம் அன்றோ?

9.சத்ரபதி சிவாஜி என்ற பாடலில்…………… (மொகலாயர் பற்றி)
பாரதப் பெரும்பெயர் பழிப்பெயராக்கினர்
சூரர்தம் மக்களைத் தொழும்பராய்ப் புரிந்தனர்
வீரியம் அழிந்து மேன்மையும் ஒழிந்து நம்
ஆரியர் புலையருக்கு அடிமைகளாயினர்

ஆரிய! நீதி நீ அறிகிலை போலும்!
பூரியர் போல் மனம் புழுங்குறலாயினை
அரும்புகழ் தேய்ப்பதும் அனாரியத் தகைத்தும்
பெரும்பதத் தடையுமாம் பெண்மை எங்கெய்தினை?
பேடிமை அகற்று! நின் பெருமையை மறந்திடேல்!
ஈடிலாப் புகழினோய் எழுகவோ எழுக
(பகவத் கீதையில் கண்ணன் சொன்ன பகுதி)

10.லாஜபதிராயின் பிரலாபம் என்ற பாடலில்………………..
சீக்கரெனும் எங்கள் விறற் சிங்கங்கள் வாழ்தருநல்
ஆக்கமுயர் குன்றம் அடர்ந்திருக்கும் பொன்னாடு
ஆரியர் பாழாகா தருமறையின் உண்மை தந்த
சீரியர் மெய்ஞான தயானந்தர் திருநாடு

(சீக்கியரை சிங்கங்கள் என்றும், பஞ்சாபில் ஆரிய சமாஜத்தை நிறுவிய தயானந்த சரஸ்வதி வேதத்தின் உண்மைப் பொருளை தந்தார் என்பதையும் பாராட்டும் பாடல் இது)

இவ்வாறு பாரதி பாடல் முழுதும் ‘ஆரிய’ என்ற சொல்லை அதன் உண்மையான ,மேன்மைப் பொருளில் பயன் படுத்தியுள்ளார்.

பாரதியார் தொல்காப்பியர் காலத்து , ‘ஆரியர்’ எனும் கற்ற மேன் மக்கள் நிறைந்த தமிழ்நாடு / இந்திய நாடு எனும் பொருளில் பாடுகிறார்… அவர் இன்றைய சாதிய பிராமணர் பற்றியா பாடுவார் !? .

ஆரிய / ஆரியர் எனும் சொல்லைப் பார்க்கும் தமிழர் அதன் பொருள் பார்க்க மற்றும் தக்க சான்று பார்க்க தவறி விட்டனர். இதனால் தமிழர்கள் பலர் பாரதி தம் சாதி கொள்கைக்கு ஆளானவரே என்கின்றனர். … , குலத்தால் அவர் பிராமணர் என்பதால் அவரை சந்தேகிக்கின்றனர். இந்த சந்தேகம் தமிழர்க்கு வரும் என்று அறியாதவனா பாரதி…

பாரதி , பல பிராமண கொள்கைகளை எதிர்த்து முண்டாசு… மீசை… குடுமி இன்மை என்று வீறு கொண்டு வாழ்ந்தவன்… .

ஆரிய என்றால் பிராமணன் என்று , தேன் தமிழின் வேர்ச்சொல் காட்டும் மா மேதை தேவநேய பாவாணர் முதல் கொண்டு அறிஞர் பலர் கருத்துக்கள் தமிழரை பாரதியை விட்டு எட்டி நிற்க வைக்கிறது…

நம் பாரதி மாசு மறுவற்ற … குற்றமற்ற சொல் வேந்தன் …சொல் பிழை பொருட்பிழை இல்லாத , ஈடு இணையற்ற .. நிகரற்ற ‘மா’த் தமிழன்… ; பெருந்தமிழன் நம் பாரதி…

உலக இயக்கம் அறிந்த / பிரம்மம் அறிந்த அந்தணன் , பிராமணன் எனும் ‘ புது சொல்லாக்கத்தின் ‘ நாயகன் நம் பாரதி…

பராதி போல் எத்தனை எத்தனையோ பாரதிகள்… நம் மண்ணில்…
நமக்கு அவர்களைப் புரிந்து கொள்ள தெரியவில்லை …

நம் தாயன்பு பாரதியை … மறத்தமிழன் பாரதியை … சன்னம் சன்னமாக புரிந்து கொள்வோம்.

தமிழுக்கும் , தமிழர்க்கும் , தமிழ்த்திரு நாட்டிற்கும் என தன் உயிரின் தேவைக்கும் ;

பாரத தாய் / வையம்(உலகம்) என தன் ஆத்மா தேவைக்கும் ;

சரிநிகர் பார்வையை செலுத்தும் மார்க்கத்தைப் பாரதி வழி
மெல்ல மெல்ல அணுகி அறிகடல் ஆவோம்..

குறிப்பு: ”ஆரிய” தொகுப்பு – லண்டன் சுவாமிநாதன்.

Sponsors

Sponsors

- Advertisement -
-Advertisement-

Follow Dhinasari :

17,941FansLike
176FollowersFollow
726FollowersFollow
14,700SubscribersSubscribe

சமையல் புதிது :

ஆரோக்கிய சமையல்: கீரை வேர்கடலை உசிலி!

வாணலியில் எண்ணெயை காயவிட்டு கடுகு தாளித்து, கீரையை சேர்த்து நன்கு வதக்கி வேகவிடவும். பிறகு அரைத்த பொடியை மேலே தூவி இறக்கவும்.

இந்த ஒரு பொடி போதும்ங்க! மல்டி பர்ப்பஸ்!

வறுத்த பொருட்களை ஒன்றாக கலந்து ஆறவிட்டு, பிறகு உப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து சற்று கொரகொரப்பாக மிக்ஸியில் அரைக்கவும்.

ஆரோக்கிய சமையல்: டேட்ஸ் எள்ளு உருண்டை!

நெய், தேன் சேர்த்து நன்கு பிசையவும். இதில் வறுத்த எள்ளு, பொடித்த முந்திரி, சேர்த்து நன்கு பிசைந்து, உருண்டைகளாக உருட்டி பரிமாறவும்.
- Advertisement -

தினசரி - ஜோதிட பக்கம்...RELATED
|பஞ்சாங்கம் | வார, மாத, வருட ராசிபலன்கள் | நியூமராலஜி |