தங்கலும் தடையும் இன்றித் தமிழாண்டு பிறந்த தன்றே!

உரத்த சிந்தனை கவிதைகள் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

dinamani wishes - 2026

தமிழினத் துரோகிகள் /
கன்னட ஈ.வே.ரா. நாயக்கர் அடிவருடிகள் /
முதலாளித்துவ ஜாதியை வைத்து துவங்கிய கட்சியினர் /
இங்கே பிரிவினை பேசுவதற்கு முன்னர்…
சித்திரையே தமிழ்ப் புத்தாண்டாக இருந்தது…
இப்போதும் அப்படியே இருக்கிறது…
நாளையும் அப்படியே இருக்கும்!
நாம்
நாமாக நம்மை உணரும் வரை!
நாளைய நம் நாம் நம்மை உணர்த்திக் கொண்டிருக்கும் வரை!

dhinasari logo news - 2026

***

பங்குனிக் கதிரோன் நேற்றுப்
பரவிய கடலுள் மூழ்கிச்
சங்கடம் ஒழிந்த தென்று
சாற்றுவான் போல இன்று
மங்கிய இருளைப் போக்க
மலைகளைத் தாண்டி வந்தான்;
தங்கலும் தடையும் இன்றித்
தமிழாண்டு பிறந்த தன்றே!

சித்திரை பிறந்தது தமிழா!
சித்தம் குலைக்கும் உன் தன்
நித்திரை நீக்குவாய் தமிழா!
நித்தம் தமிழ்ப் பணியை
எத்திறமும் ஆற்றவே வாழ்வில்
ஏங்கிக் காத்திரு தமிழா!
இத்திறம் மறவாதே தமிழா!
என்றுமே இன்புறுவாய் தமிழா!

மனமதில் இருளைப் போக்கி
மாசிலா அறிவுச் சுடரை
அனுதினம் பெருக்கி மக்கள்
ஆர்வமும் கவர்ந்தவற்றுள்
“தினமணி” என்னும் எங்கள்
தேன்மொழிச் செய்தித் தாளின்
இனமொன்று தோன்றச் செய்தாள்
ஈடிலாத் தமிழ்தாய் அன்றோ?

அன்பெனும் கருணை ஊற்றில்
அமுதெனும் புனல் சொரிந்து
பொன்னிறம் பொலிந்து வீசிப்
பொங்கியே வழிந்து ஓடும்
தன்னிகர் தானே யென்னும்
தனித் தமிழ் பருகி மக்கள்
நன்னிலை எய்த வைத்த
நந்தமிழ் தாயே வாழ்க!

  • நன்றி: தினமணி 
  • கருத்து: செங்கோட்டை ஸ்ரீராம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.