நான் விமர்சனங்களைப் படிப்பதில்லை ! சுந்தர் .சி !

பாக்கியராஜ் சார் எழுதுன 'வாங்க, சினிமா பற்றிப் பேசலாம்’ புக்க எல்லாரும் வாங்கி படிங்க.

தமிழ் சினிமா உலகத்துல 20 வருஷங்களா தொடர்ந்து சக்சஸ்ஃபுல் டைரக்டரா இருந்துகிட்டு வர்ற சுந்தர்.சி. ஒரு ஃபங்ஷன்ல நஷ்டப்படாம சினிமா எப்படி எடுக்கணும்னு சொல்லியிருக்கார். துணை இயக்குநர்களுக்கான சினிமா பாடத்திற்கான டிப்ஸ் இது.

ஒரு நடிகர மனசுல வச்சிக்கிட்டு ஸ்க்ரீன்ப்ளே எழுதாதீங்க. கெடச்ச நடிகரோட பாடி லாங்குவேஜுக்கு ஏத்த மாதிரி அந்த படத்தோட கேரக்டர இம்ப்ரூவ் பண்ணுங்க என்றும் கூறியிருக்கிறார்.

அசிஸ்டெண்ட்டா இருக்குறப்போ ஓவரா சீன் போடாக்கூடாது. வேலை செய்றது மாதிரியே பில்டப் காட்டக்கூடாது. ஆனா சின்சியரா வேலை செஞ்சா பல பேர் கண்ணெல்லாம் உங்க மேலதான் இருக்கும். அதனால் உங்களுக்கு வாய்ப்பும் தேடி வரும். நம்பிக்கையோட வேலையைச் செய்யுங்கள்.

ஒவ்வொரு படம் ஆரம்பிக்கும்போதும், பென்ச் மார்க்கா ஏற்கனவே வந்த ஒரு படத்தை மனசுல வச்சிக்கோங்க. பழைய காதலிக்க நேரமில்லை தான் என்னோட உள்ளத்தை அள்ளித்தா படத்துக்கு பெஞ்ச் மார்க். லொகேசன்ல திடீர் திடீர்னு டிசைட் பண்ண வேண்டியிருக்கும்.

அதனால சிச்சுவேஷனக்கு ஏத்தமாதிரி முடிவெடுக்க மனசளவுல தயாராகி இருக்கணும். நம்ம எடுக்கப்போற படத்துக்கு பக்காவா ஸ்க்ரீன்ப்ளே ரெடியா இருந்த நிச்சயம் வெற்றி தான். படத்தோட சீன் எல்லாம் துண்டு துண்டா இருந்தா ஆடியன்ஸ் படத்தோட ஒன்ற முடியாது. எனவே சீகுவென்ஸ்  போல சில சீன்கள் இருக்க வேண்டும். அப்பதான் எல்லாருக்கும் புரியும்.

காமெடிங்கறது கதைய நகத்துறதுக்காக, கதைக்குள்ளேயே காமெடியாக இருக்கணும். கதையில வர்ற கேரக்டர் ஒன்னு காமெடியனா இருந்தா, ஆடியன்ஸும் படத்தோட லயிச்சி போவாங்க. இல்லாட்டி அடிக்கடி எந்திரிச்சி போய் தம் அடிப்பாங்க.

வின்னர் படத்தோட ஒரிஜினல் ஸ்க்ரிப்ட் படி, இன்ட்ரவெல் வரை தான் வடிவேலோட காமெடி வரும். ஆனா, அப்ப பிரசாந்த்தோட மார்கெட் கொஞ்சம் டல்லடிச்சதுனால வடிவேலு படம் முழுக்க வர்றது மாதிரி ஸ்க்ரிப்ட மாத்திட்டோம். (நான் முன்னாடியே சொன்னது மாதிரி சிச்சுவேசனுக்கு ஏத்த மாதிரி முடிவை மாத்துவதற்கு இது ஒரு  உதாரணம்). ஹீரோக்கு ஜால்ரா அடிக்கிறது மாதிரி இல்லாம, படத்தோட கதைக்கு என்ன தேவையோ அத மட்டும் செய்யுங்க. மத்த படங்களோட இன்ஸ்பிரேசன்ல தான் என்னோட சில படங்கள் உருவாயிருக்கு. படப்பிடிப்பு சமயத்தில் நம்பிக்கையோட வேலைய செய்ங்க. யாருக்காகவும் நீங்க பயப்படாதீங்க.

ரஜினி சார், கமல் சார் இவங்க இன்னிக்கு இந்த அளவுக்கு வளந்திருக்காங்கன்னா அதுக்கு முக்கிய காரணம் அவங்க டைரக்டர்ங்களுக்கு கொடுக்குற மரியாதை தான். சில நேரத்துல லாஜிக்க விட, சுவாரஸ்யமும் செண்டிமெண்ட்டும்  தான் முக்கியம். படத்தோட எல்லா சீனும் லாஜிக்கா இருக்கணுங்குற அவசியம் இல்ல.

அருணாச்சலம் படத்துல ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் மேனேஜர், ரஜினியை இரவு 12 மணிக்கு எழுப்பி வெளியே போகச் சொல்லும் சீன் இதுக்கு நல்ல உதாரணம். சினிமா எடுக்குறதுக்கான எல்லா ரூல்சையும் தெரிஞ்சுக்கிட்டு அப்புறம் அதை தேவைப்பட்டா மீறிக்கலாம்.

சினிமா ஒரு விஷுவல் மீடியம். அதனால ஆடியன்ஸ் விஷுவலா புரிஞ்சுக்கிற விசயத்துக்கு போய் தேவையில்லாம மைண்ட் வாய்ஸை யூஸ் பண்ணாதீர்கள். ஒரு நடிகர மனசுல வச்சிக்கிட்டு ஸ்க்ரீன்ப்ளே எழுதாதீங்க. கெடச்ச நடிகரோட பாடி லாங்குவேஜுக்கு ஏத்த மாதிரி அந்த படத்தோட கேரக்டர இம்ப்ரூவ் பண்ணுங்க.

எப்ப ஒருத்தன் தன்னோட ரெண்டு கைய மறக்குறானோ, அப்போதான் அவன் ஒரு நல்ல நடிகனா ஆகுறான். சினிமாங்குறது கடைசி வரைக்கும் செதுக்கிட்டே இருக்க வேண்டிய விசயம்கிறத புரிஞ்சிக்கோங்க. டைட்டானிக், 40 நாள்ல ஷூட்டிங் முடிஞ்ச படம். தெளிவா பிளான் பண்ணி எறங்கினா 60 நாள்லயே ஒரு படத்தோட ஷூட்டிங்க முடிச்சிடலாம்.

ஒரு நாளைக்கு 5 நிமிஷத்துக்கான ஃபுட்டேஜ் எடுத்தாக்கூட போதுமே! பட்ஜெட்ட எப்பவுமே மனசுல வச்சுக்கோங்க. படம் ஓடனா கூட, ஓவர் பட்ஜெட்டால நஷ்டம் வந்துடும். நல்ல டைம் எடுத்துக்கிட்டு ப்ரீ-புரடக்சன் ப்ளானிங்க பக்காவா செஞ்சுக்கோங்க.

ஷூட்டிங்ல இம்ப்ருவ் செஞ்சா மட்டும் போதும். புதுமுகங்கள வச்சி படம் எடுக்குறப்போ, ஒர்க்ஷாப் ரிகர்சல் மூலமா ட்ரெய்னிங்க கொடுங்க. இந்த ஜெனர் தான் அப்பிடின்னு லிமிட் எதுவும் வச்சுக்காதீங்க. நமக்கு எது சரியா வரும்னு போகப்போகத்தான் தெரியும். ஒரு படத்த முடிக்கும்போதே, அத்தோட அதுலிருந்து வெளியில வந்துடுங்க.

செண்டிமெண்ட்டலா அதுலயே அட்டாச் ஆயிடாதீங்க. ஒரு படம் முடியிற ஸ்டேஜ்ல இருக்குறப்பவே அடுத்த படத்தோட வேலையில டீப்பா எறங்கிடுங்க. பாக்கியராஜ் சார் எழுதுன ‘வாங்க, சினிமா பற்றிப் பேசலாம்’ புக்க எல்லாரும் வாங்கி படிங்க. டெக்னாலஜி வளர்ச்சியினால படம் எடுக்குற டைம் கண்டிப்பா குறையணும்.

மொதல்ல சிஜி சம்பந்தப்பட்ட ஷாட்கள முடிச்சா, மேக்கிங் டைமை தாராளமா குறைக்கலாம். ஷூட்டிங்கப்பவே எடிட்டிங்கையும் முடிச்சிக்கலாம். விமர்சனத்த பெருசா எடுத்துக்காதீங்க. அவங்க வேலைய அவங்க பாக்குறாங்க. அவ்வளவு தான். மீடியா, நெட்டில் வர்றத படிக்கலாம். அத பெருசா எடுத்தக்காதீங்க. நான் விமர்சனங்கள படிக்கிறதில்லை. படத்த முடிச்ச பின்னாடி, அத கரெக்ட் பண்ண முடியாது.

படைப்பாளிங்க ஃபேஸ்புக், ட்விட்டர்னு சோசியல் மீடியாவுல இருக்குறது அவ்வளவு நல்லதில்ல. ஃபேஸ்புக் மாதிரி சோசியல் மீடியாவுல ரொம்ப இன்வால்வ்மெண்ட்டோட இருக்காதீங்க. எதுக்கு சொல்றேன்னா, அதுல இருக்குற 20 பெர்சன்ட் ஆடியன்சை திருப்திபடுத்த படம் எடுத்தா, வெளிய இருக்குற 80 பெர்சன்ட் ஆடியன்சை நாம இழக்க வேண்டி வரலாம்.

ஒவ்வொருத்தருக்கும் படம் எடுப்பது ரொம்ப கஷ்டமான விசயம். மெஜாரிட்டி மக்களுக்கு பிடிக்கிற மாதிரியான விசயங்கள படத்துல வச்சா போதும். ஒவ்வொருத்தரோட விமர்சனங்களையும் கண்டுக்கவேண்டிய அவசியமே இல்ல. ஒவ்வொது படத்த எடுக்குறப்பவும், இது என்னோட முதல் படம்னு மனசுல பயம் இருக்கணும். மொத படம் பல வருஷம் கஷ்டப்பட்டு ரெடி பண்றது. அதுல ரொம்ப சுலபமா ஜெயிச்சுரலாம்.

ஆனா அதுக்கப்புறமா இந்த ஃபீல்டுல நிக்கிறது தான் ரொம்ப கஷ்டம். நம்மளோட ஒரு படம் ஓடிச்சின்னா நமக்கு நாலு பேர் கை கொடுப்பாங்க. அதே படம் ஓடலைன்ன நாலாயிரம் பேர் எழுவு வீட்ல துக்கம் விசாரிக்கிறது மாதிரி விசாரிப்பாங்க. இது தாங்க சினிமா உலகம்.

டைரக்க்ஷன் அப்படிங்கறது 24 மணி நேரமும் ஒர்க் பண்றது. அதனால எப்பவுமே அலார்ட்டா வேல பாக்கணும். யூடியூப் போல ஆன்லைன்ல டெக்னிகல் சம்பந்தப்பட்ட விசயங்கள் எல்லாம் சும்மா கொட்டிக்கெடக்குது. அத படிச்ச நெறைய கத்துக்கோங்க. என்று சொன்னார்.

-Advertisement-வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

Donate with

Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation Bharath! Please consider supporting us to run this Tamil web portal continuously.

Loading...