பவர் ஸ்டாரை காணவில்லை..!


பிரபல நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனைக் காணவில்லை என்று அவரது மனைவி ஜூலி அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை அண்ணா நகரில் வசித்து வருபவர் பிரபல நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன். படத் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் சமூக சேவகராகவும் வலம் வரும் பவர்ஸ்டார் சீனிவாசன், தற்போது நகைச்சுவை வேடங்களில் கொடிகட்டி வருகிறார்.  

இந்நிலையில் நண்பர் ஒருவரைப் பார்க்கச் செல்வதாகக் கூறிய பவர்ஸ்டார் சீனிவாசன், இன்று வரை வீடு திரும்பவில்லை! அதன் பின்னர் பல இடங்களிலும் கணவரைத் தேடி அலைந்து வெறுத்துப் போன ஜூலி, அண்ணாநகர் காவல் நிலையத்தில் கணவரைக் காணவில்லை என புகார் அளித்துள்ளார்.

பவர்ஸ்டார் சீனிவாசன் மீது மோசடி புகார்கள் உள்ளன. அவற்றில் தொடர்புடைய யாராவது பவர்ஸ்டாரைக்  கடத்திவைத்து மிரட்டுகிறார்களா அல்லது இந்தத் தொல்லைகளுக்குப் பயந்து அவர் தலைமறைவாக இருக்கிறாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.