21/10/2019 11:13 PM
அரசியல் தேசத்தின் ஒற்றுமையால் கிடைத்த புகழ்! மோடியின் வசுதைவ குடும்பகம்!

தேசத்தின் ஒற்றுமையால் கிடைத்த புகழ்! மோடியின் வசுதைவ குடும்பகம்!

அமெரிக்கா ஹூஸ்டன் நகரில் நரேந்திர மோடி கலந்து கொண்ட "howdy modi" நிகழ்ச்சி இனிதே முடிந்தது. மகிழ்ச்சி.

-

- Advertisment -
- Advertisement -

அமெரிக்கா ஹூஸ்டன் நகரில் நரேந்திர மோடி கலந்து கொண்ட “howdy modi” நிகழ்ச்சி இனிதே முடிந்தது. மகிழ்ச்சி.

இந்த நிகழ்ச்சி முடிவில் நான் உணர்ந்தது “நரேந்திர மோடி என்ற மனிதர் வெளி நாடு வாழ் இந்தியர்களையும் ஒன்றிணைக்கிறார் இல்லை இந்தியர்கள் ஒற்றுமையால் நரேந்திர மோடி இந்த உயரம் அடைகிறார்” என்று எப்படிக் கூறினாலும் அது உண்மையே.

ஒற்றுமையாக இந்தியரா நிற்கும் போது கிடைக்கும் வலிமை அது அசாத்தியமானது. அதை ஹூஸ்டன் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்த போதே காண முடிந்தது. வேறு எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு வெளி நாடு வாழ் இந்தியர்களுக்கு இந்தியா மீது , இந்திய அரசின் மீதும் , இந்த மண்ணின் மீது மிகப் பெரிய ஒரு ஈர்ப்பையும் தொடர்பையும் உருவாக்கிய நாட்டின் வெளியிலிருந்தாலும் நாட்டுப்பற்றோடு இந்த தேசத்தின் ஆன்மாவோடு இந்தியர்களை இணைத்துள்ளார் நரேந்திர மோடி. அந்த வகையில் பாஜக முன் வைக்கும் “Nation First” என்ற முழக்கம் பெரும் வெற்றி அடைந்து வருகிறது. ஆரோக்கியமான விசயம் இது.

அமெரிக்க அதிபர் ஒருவர் இந்த விதமான நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என்பது மிக அபூர்வமான விசயம். அது இன்று நடக்கிறது என்றால் அது தேச மக்களின் ஒற்றுமைப் படுத்தும் விதத்தில் தான் நடக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான யுக்தியாக நினைத்தாலும் கூட இந்த விதம் முன்பு நிகழ்ந்தது இல்லை என்ற விதத்தில் இந்தியர்களின் ஒற்றுமைக்குக் கிடைத்த அங்கிகாரமே.

இந்தியா முழுவதும் நமது பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி பற்றி செய்திகளும் , நேரலைகளும் ஒளிபரப்பு செய்து கொண்டிருக்க இங்கே சில பத்திரிக்கைகள் , சேனல்கள் மொத்தமாகப் புறக்கணித்து தங்கள் கேடுகெட்ட அயோக்கியத்தனமான வேலையைக் காட்டியுள்ளார்கள்.

அவர் நமது நாட்டின் பிரதமர் என்பதை விட்டுவிட்டு மோடிக்கு நல்ல பெயர் கிடைக்கக் கூடாது என்பதிலும் , இந்தியர்கள் ஒற்றுமை என்ற விசயம் இருக்கக்கூடாது என்பதில் திராவிட சித்தாந்த , கம்யூனிஸ்ட் ஓநாய்கள் வாழும் பத்திரிக்கை கூட்டம் நன்றாகவே வேலை செய்கிறது. ஆனால் அவர் அதனையும் தாண்டி மேலே செல்கிறார்.

இன்னொரு கூட்டம் நரேந்திர மோடி அவர்களுக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு தெரிவிக்க இலவச பேருந்துகள் , இருப்பிடங்கள் தருவதாகக் கூறி அனைவரும் வரும்படி அழைப்பு விடுக்கிறார்கள் அவர்கள் பெரும்பாலும் பாகிஸ்தான் நாட்டை சார்ந்தவர்கள் , அவர்களுக்கு ஆதரவாக வேலை செய்தது திராவிட பெரியாரியவாதிகள்.

இதனால் தான் இந்த வெறுப்பு அரசியலின் உச்சத்தில் இந்த அளவிற்குக் கீழ்த்தரமாகப் பாகிஸ்தான் தீவிரவாத நாட்டின் ஆதரவாளர்களுடன் கைகோர்க்கும் இந்த கேடுகெட்ட துரோகத்தைச் செய்யும் வேலைக்குத் தான் பிரிவினைவாத திராவிட சிந்தனை அழித்தொழிக்க வேண்டும் என்பேன். இங்கே பாகிஸ்தான் வந்து குண்டு வைத்து 300 பேர் இறந்தால் கூட மோடியைத் திட்டுவதில் ஆர்வம் இருப்பார்களே ஒழியப் பாகிஸ்தானை ஒரு போதும் எதிர்க்கவே மாட்டார்கள் இந்த திராவிட பிரிவினைவாத மன நோயாளிகள்.

இந்த விதம் நாட்டின் உள்ளேயும் வெளியேயையும் தேசத்தை நேசிக்கும் பல கோடி மக்களை ஒன்றிணைக்கும் விதத்திலும் சரி , நம் தேசத்திற்கு எதிரானவர்கள் துரோகிகள் கதறவிடும் வகையிலும் சரி பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் , பிஜேபி கட்சியின் நகர்வுகளையும் நான் நேசிக்கிறேன்.

எதிரியும் துரோகிகளும் என்றுமே, எல்லா காலமும் இருப்பார்கள்- ஆனால் அவர்கள் மன அமைதியோடு இருக்கக்கூடாது, கதறிக் கொண்டே இருக்க வேண்டும். அது மக்கள் மன அமைதியோடு வாழ வழி செய்யும் என்பதால் நரேந்திர மோடி தலைமையிலான இந்த பாஜக அரசை நாம் தாராளமாக ஆதரிக்க வேண்டும்.

மதம் மொழி ஜாதி இனம் கடந்த இந்தியராக ஒற்றுமையாக வாழ்வதில் தான் நம் பெருமையும் நமது தேசத்தின் நன்மையும் உள்ளது. இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  • மாரிதாஸ்
Sponsors

- Advertisement -
- Donate via PayTM -
Tamil Dhinasari News..! We are in the path of protecting our Hindu dharma! Please consider supporting us to run this Tamil web portal continuously.
-Advertisement-

சினிமா:

-Advertisement-
-Advertisement-
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you

%d bloggers like this: