தெலுகு திரையுலகை அசைத்துப் பார்த்த நடிகை ஸ்ரீரெட்டி இப்போது தமிழ்த் திரையுலகு நோக்கித் திரும்பியிருக்கிறார். இயக்குனர் முருகதாஸிடம் இருந்து தொடங்கிய ‘ஆட்டோக்ராஃப்’ இப்போது நடிகர் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் என பட்டியல் நீண்டு கொண்டே வருவதால், கோடம்பாக்கம் பரபரப்படைந்துள்ளது.

நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் ரீதியிலான புகார் கூறி, தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை எதிரில் அரை நிர்வாண போராட்டம் நடத்தி திரையுலகை அதிர வைத்தார். நடிகைகளை படுக்கைக்கு அழைப்பவர்கள், அழைத்தவர்கள் என பலரின் பெயர்ப் பட்டியலை வெளியிட்ட படி இருந்தார். இதுகுறித்து தேசிய மகளிர் ஆணையம் விசாரணையில் இறங்கி இருக்கிறது.

இந்நிலையில் அமெரிக்காவில் இளம் நடிகைகள் என்ற போர்வையில் தயாரிப்பாளர் ஒருவருடன் சிலர் கைதாக, அமெரிக்காவில் பாலியல் தொழிலில் ஈடுபடும் நடிகைகள் பட்டியல் தன்னிடம் இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.

தொடர்ந்து, தமிழ்ப் பட இயக்குனர் ஒருவர் மீத குற்றம் சாட்டியவர், திடீரென அவர் பெயரையும் தனது பேஸ்புக்கில் பதிவிட்டு மாஸ் காட்டினார். அதைப் பார்த்து தமிழ்த் திரையுலகே அதிர்ந்தது. இயக்குனர் முருகதாஸ் பெயர்தான் அது. குறிப்பாக, ஹோட்டல் க்ரீன்பார்க் நினைவு இருக்கா என்று அவர் கேட்டது, பலரையும் பல விதங்களில் யோசிக்க வைத்தது.

தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்த் பெயரையும் இழுத்து விட்டுள்ளார். நடிகர் ஸ்ரீகாந்த் படத்தை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு, “5 வருடங்களுக்கு முன்னால் ஐதராபாத்தில் ஓட்டலில் நடந்த சி.சி.எல். கிரிக்கெட் விருந்து நினைவிருக்கிறதா. நீங்கள் என்னுடைய.. (ஆபாச வார்த்தைகள்). கிளப்பில் நாம் இருவரும் சேர்ந்து நடனம் ஆடியபோது படத்தில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்தீர்களே. உங்களுக்கு நினைவிருக்கிறதா?” என்று பதிவிட்டு இருக்கிறார்.

மேலும் எனக்கு ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நன்றி. இது தமிழ் திரையுலக நேரம் என்று கூறியிருக்கிறார். இதுதான் இப்போது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனிடையே இன்று அவர் தூக்கி வீசியுள்ள குண்டு, ஜல்லிக்கட்டுப் போராளிகள் வயிற்றில் புளியைக் கரைத்து உள்ளது. ஸ்ரீ ரெட்டி வீசிய குண்டு விளைவித்துள்ள சேதத்தில் சிக்கியவர் நடிகர் ராகவா லாரன்ஸ்.

இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஹைதராபாத்தில் உள்ள கோல்கோண்டோ ஹோட்டலில் ஒரு நண்பர் மூலம் ராகவா லாரன்ஸை சந்தித்தேன். என்னை அவரது அறைக்கு அழைத்துச் சென்றார். அறையில் ராகவேந்திரா சாமி படத்தையும், ருத்திராட்ச மாலைகளையும் வைத்திருந்தார். அதைப் பார்த்து நான் வியப்படைந்தேன். ஏழ்மை நிலையில் இருந்து சினிமாவிற்கு வந்ததால், புதிதாக வாய்ப்பு தேடி வருபவர்களுக்கு உதவி செய்து வருவதாகவும், ஏழைகளுக்கு தங்குமிடம் உட்பட பல உதவிகளை செய்து வருவதாகவும் கூறினார். அதைக்கேட்டு ஆச்சர்யப்பட்டேன்.

ஆனால், போகப் போக அவரின் உண்மையான முகம் எனக்குத் தெரிந்தது. என் உடலின் வயிற்றுப் பகுதி உட்பட சில பகுதிகளை காட்டச் சொன்னார். கண்ணாடி முன் நின்று ரொமாண்டிக்காக சில அசைவுகளை செய்யச் சொன்னார். அதன்பின் படுக்கையில் தள்ளி என்னிடம் உறவு கொண்டார். கண்டிப்பாக எனக்கு வாய்ப்பு தருவதாகக் கூறினார். அதை நம்பி சில நாட்கள் அவருடன் நட்புடன் பழகினேன். ஆனால் எதுவும் செய்யவில்லை” எனக் கூறியுள்ளார்.

இவரது பதிவு இப்போது ஹாட் டாபிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. இப்படி அதிர்ச்சியுடன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவராக பெயரை வெளியிடுவதை விட, யாரெல்லாம் ஸ்ரீரெட்டியுடன் தொடர்பில் இருந்தார்களோ அவர்களாகவே முன்வந்து நான் வெறுமனே பார்த்திருக்கிறேன் பேசியிருக்கிறேன் அவ்வளவுதான் என்று வலிய வந்து கூறிவிடலாம் என்கிறார்கள் சமூக வலைத்தள வாசிகள்!

Donate with
Support us! We are in the path of protecting our Hindu dharma and our Nation! Please consider supporting us to run this for our 'Dharma'.