December 3, 2021, 7:28 pm
More

  அங்கே மேடையில் அவர்கள் ஒருமுழக்கம்! இங்கே டிவிட்டரில் தமிழிசை இடிமுழக்கம்!

  tamilisai soundarrajan bjp - 1

  திமுக., தலைவராக இருந்த கருணாநிதியின் சிலைத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு கேரள முதல்வர் பிணராயி விஜயன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சோனியா, ராகுல் உள்ளிட்டோர் பேசினர். மேலும், ஸ்டாலினும் பிரதமர் மோடியை திட்டித் தீர்ப்பதற்காகவே ஒரு நிகழ்ச்சியை வழக்கம் போல் ஏற்பாடு செய்தார். 

  இந்த சிலைத் திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியவர்களின் பேச்சுக்களுக்கு அவ்வப்போது தனது டிவிட்டர் பதிவில் பதில் கொடுத்துக் கொண்டே இருந்தார் தமிழக பாஜக.,. தலைவர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன். 

  அவரது டிவிட்டர் பதிவுகளில் இருந்து….

  கோபாலபுரத்து குடும்பமும் நேரு குடும்பமும் மீண்டும் இணைந்தது என்று பேசுகிறார் துரைமுருகன்….. மக்களோடு மக்கள் இணைந்தால் மக்களாட்சி … குடும்பத்தோடு குடும்பம் இணைந்தால் குடும்ப ஆட்சி… மக்கள்புரிந்து கொள்வார்கள்… நீங்கள் நடத்தியது குடும்ப ஆட்சி என்று..!

  மத்தியில் இருக்கும் ஆட்சியினால் நாம் அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளோம்.. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு… உண்மைதான் ஊழல்வாதிகள் கறுப்புப்பணமுதலைகள் வெளிநாட்டில் சொத்தை பதுக்கியவர்கள் குடும்ப ஆட்சியாளர்கள்தான் மோடி ஆட்சியில் பாதிக்கப்பட்டார்கள் ஓடிஒளிந்தார்கள்..கூடி கூவுகிறார்கள்

  மன்மோகன்சிங் அவர்களை பிரதமராக்கி முன்னிறுத்தி பின்புறமிருந்து ரிமோட் மூலம் 10 ஆண்டுக்காலம் இயக்கிய. காங். தலைவி சோனியா மேடையில் வைத்துக்கொண்டு @ncbn உரை ( தமிழக அரசின் ரிமோட் டெல்லியில் உள்ளது. அவர்கள் சொல்லுவதை செய்பர்களாக தமிழக ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்: திமுக பொதுக்கூட்டத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேச்சு @ncbn )

  திமுக-காங்.காலத்து சாதனைகளை பட்டியலிட்ட ஸ்டாலின் அவர்களே… இலங்கைத் தமிழர்களை இறுதிப்போரில் அழித்து ஒழிக்க துணைநின்றதை சொல்ல மறந்ததேன்?….?

  4ஆண்டுகளில் மோடி அவர்கள் பலமுறை தமிழகம் வந்துள்ளார்கள். ஐக்கிய முண்ணனி 10 ஆண்டுகால ஆட்சியில் எத்தனைமுறை அப்போதைய பிரதமர் மன்மோகன்சிங் அவர்கள் தமிழகம் வந்தார்கள்? இயற்கைப் பேரிடர் வந்த நேரங்கள் உட்பட.கூட்டணியில் இருந்தும் தமிழகத்திற்கு எத்தனைமுறை கூட்டிவந்தீர்கள்?

  தமிழை செம்மொழி ஆக்க எடுத்த முயற்சியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களின் பங்களிப்பை மறக்க முடியுமா? மறைக்க முடியுமா? சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின் உரையில்.. கலைஞரை விமர்சையாக… பேசியதைவிட மோடியை.. விமர்சனமாக பேசியதே அதிகம்.கலைஞர் புகழ் இசை பாடியதைவிட மோடி இகழ் வசை பாடியதே அதிகம்…!

  கலைஞர் அவர்கள் உடல் நலம் குன்றியபோது நேரில் வந்து உடல்நலம்தேற என்னுடன் டெல்லி வாருங்கள் என அன்புடன் அழைத்து..இறுதி அஞ்சலிக்கு வந்ததோடு பாராளுமன்றத்தை இரங்கலுக்காக ஒத்திவைத்த (பாராளுமன்ற உறுப்பினரல்லாதவருக்கு)மோடியின் அரசியல் நாகரிகத்தை..ஸ்டாலினிடம்..எதிர்பார்க்க முடியாது…

  ராகுலை பிரதமராக்கப்போகிறாராம் ஸ்டாலின்…. பிறப்பில் சாமானியன் ஒருவர் பாரதப்பிரதமராக சாதிப்பதை பொறுக்காத பட்டத்து இளவரசர்கள் கூடி பதவிகளை பரிமாறிக் கொள்கிறார்கள் ? பாவம் பழைய வரலாறுகளை மறைத்து ! நேருவின் மகளே வருக என்பார்கள் ! நெருக்கடிநிலை கொண்டுவந்து எங்களை அடித்தார்கள் என்பார்கள்?

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,104FansLike
  370FollowersFollow
  47FollowersFollow
  74FollowersFollow
  1,778FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-