November 30, 2021, 2:35 am
More

  கடையனுக்கும் வழிகாட்டி: சீரடி சாய்பாபா -2

   

  05 June09 Sai baba - 1

  இறைவனின் நாடகத்தில் சிலநேரம் எதிர்பாராத நிகழ்வுகள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ராமாயணத்தில் அவதார நோக்கம் நிறைவேற ராமன் காட்டிற்குச் செல்ல வேண்டும் என்பதற்காக கைகேயின் மூலம் நாடகத்தை நடத்தியது பரம்பொருள்.

  அது போல் இப்போது இவர்கள் மூலம் காட்டில் நாடகம் தொடர்ந்தது.

  காத்திருந்த கூட்டத்தில் ஒருவன் செங்கல்லை எடுத்து பாலகனை நோக்கி வீசினான் தியானத்தில் இருந்து திடீரென விழித்த வெங்குசா தன் பார்வை மூலமே கல்லை நிறுத்தினார் .

  அதற்குள் இன்னொருவன் கல்வீச அது வெங்குசா மீது பட்டு விட்டது. ரத்தம் கொட்டியது பதறிய பாலகன் குருவின் ரத்தத்தினை துடைத்துவிட்டு கூறினான். குருவே தங்கள் பாதங்களில் எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன் தயவுசெய்து நான் உங்களை பிரிய அனுமதியுங்கள். தயவுசெய்து நான் உங்களை பிரிய அனுமதி அளியுங்கள். என்னால் தான் தங்களுக்கு பெரும் துக்கம் வந்துவிட்டதை என்னால் இனி உங்களுக்கு கஷ்டம் வேண்டாம் என்றான் பணிவுடன்.

  துக்கம் மகிழ்ச்சி இன்பம் எல்லாம் கடந்த நிலையில் இருந்த வெங்குச புன்னகை மாறாமல் அன்புடன் பாலகனிடம் பேசினார். இறைவன் எந்தச் செயலையும் வீணாகவும் தவ றாகவும் செய்வதில்லை.

  இராமன் காடு சென்றதும் கண்ணன் கோகுலம் சென்றதும் மக்கள் நலனுக்காகவே அதுபோல் இன்றைய நிகழ்வு கூட உலக நலன் கருதியே நடைபெறுகிறது. அதனால் நான் பிரியப்போகும் நிகழ்வும் நன்மைக்காகவே.

  நாளை எனது கர்மம் எல்லாம் தொலைந்து போய்விடும் இந்த காயத்தினால் உயிர் பிரியாது எனது சங்கல்பத்தினால் செய்யப்போகிறேன். அதற்கு முன் ஒரு கடமை இருக்கிறது அதை இப்போது செய்யப்போகிறேன். தொலைவில் நிற்கும் பசுவிடமிருந்து பால் கறந்து வா என்று அனுப்பினார் .

  பசுவிடம் சென்ற பாலகன் தன் குருவின் கட்டளையை பசுவின் சொந்தக்கார ரிடம் சொன்னார். அதைக் கேட்ட அந்த கோபாலன் சிரித்து விட்டு சொன்னான். இப்பசு பால் மரத்த பசு பால் தராது என்றான். தன் குருவின் மீது கொண்ட நம்பிக்கையில் கோபாலனையும் பசுவையும் குருவிடம் அழைத்து வந்தான்.

  பசுவின் நிலையை புரிந்து கொண்ட வெங்குசா பசுவை தலை முதல் கால் வரை தடவிக்கொடுத்து இப்போது பால் கற என்றார் .என்ன ஆச்சரியம் பசுவின் மடியில் பால் சுரந்தது.

  கோபாலன் பால் கறந்து கொடுக்க, தன்னிடமிருந்த சக்தியையெல்லாம் தாரை வார்த்துக் கொடுத்தார். பூமியை தானமாக கொடுப்பது போல் தனது சக்தியை எல்லாம் தாரை வார்த்துக் கொடுத்தார்.

  ஒரு புதரின் மறைவில் இருந்து காட்சிகளை கண்டவர்கள் சிறிது நேரம் சிலையாகி பின் நினைவுக்கு வந்தனர். சிறிது நேரத்தில் மயங்கி கிடந்தவனை தூக்கிக்கொண்டு வந்து காலில் விழுந்து தங்களை மன்னிக்குமாறு வேண்டினர்.

  அவர்கள் செய்த தவறின் தன்மை தெரியாதவர்கள் என்பதை உணர்ந்த குரு அவர்களிடம் கூறினார். இப்போது என்னிடம் எந்த சக்தியும் இல்லை எது வேண்டுமானாலும் பாலகனிடம் கூறுங்கள் என்றார். என்னால் எதுவும் செய்ய இயலாது என்றார் இப்போது கூட்டம் பாலகனே சரணம் என்ற து. குருவின் அசைவுகளின் பொருளை உணர்ந்த பாலகன் மீதமிருந்த பாலை மயங்கிய வன் மீது தெளித்து
  எழுக என்றான்.

  இருந்ததுபோல் எழுந்தான் வீசியவன் மறுநாள் தனது சங்கல்பத்தால் தனது பூதவுடலை விடுத்து புகழடைந்தார். தனது குருவிற்கு செய்ய வேண்டிய கடன்களை எல்லாம் செய்துவிட்டு தன் பயணத்தை துவக்கினார் .

  அவ்வூர் மக்கள் தாங்கள் ஊரிலேயே தங்கி தன் பணியை தொடர வேண்டும் என்றனர். பாலகன் முடியாது என அன்புடன் கூறிவிட்டு மேற்கு நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தார்.

  பாரத தேசத்தில் பல புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று தங்குவது நமது பாபங்கள் விலகுகின்றன. அதேபோன்று கங்கை யமுனை சரஸ்வதி நர்மதை கோதாவரி
  போன்ற நதிகளில் ஸ்நானம் செய்வதாலும் தண்ணீரைத் தெளித்து கொள்வதாலும் அப்பகுதியில் வசிப்பதாலும் நம் பாவங்கள் விலகி புண்ணியம் அடைகிறோம் .

  அருகில் இருக்கும் நகரங்களுக்கு கூட தெரியாத கிராமங்கள் மகான்கள் பிறப்பதா லும் வசிப்பதாலும் விரைவில் புகழ் பெற்று வருகின்றன. நகரில் இருந்து மேற்கு நோக்கி பயணித்த பாலகன் கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள தாலுகாவிற்கு உட்பட்ட என்னும் கிராமத்தில் உள்ள வேப்ப மரத்தினடியில் நீண்ட தாடியுடன் வெள்ளை அங்கி அணிந்து தோன்றினார்.

  சிறிய கிராமம் என்பதால் புதிதாக வந்த நபரை எளிதில் அடையாளம் கண்டு கொண்டனர். அங்குமிங்கும் சுற்றிய வாலிபன் பெரும்பாலும் வேப்ப மரத்தின் அடியில் எந்தச் சூழலினாலும் பாதிக்கப்பட்டவராக இல்லாமல் பெரும்பாலான நேரம் வெட்டவெளியை இருப்பிடமாகக் கொண்டான்.

  சில நேரம் சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று வந்தார். பலரில் சிலர் மட்டுமே யார் என்று விசாரித்தார்கள் ஆனால் யாருக்கும் எந்த பதிலும் கூறாமல் சுற்றிக் கொண்டே இருந்தார் அவ்வூரில் சிவன் கோவிலில் பக்தர்கள் மேல் இறங்கிய தெய்வத்திடம் பலரும் இங்கு சுற்றும் வாலிபன் யாரென கேட்டநர்

  அதற்கு பதில் சொல்லிய தெய்வம் மண் வெட்டி கொண்டுவருமாறு கூறியது மண்வெட்டி கொண்டு கொஞ்ச தூரம் தள்ளி ஒரு இடத்தை தோண்டுமாறு கூற மக்கள் அப்படியே செய்தனர் என்று இரண்டு மூன்று அடி தோன்டியவுடன் ஒரு நிலவரை போல் தோன்றியது அதில் நான்கு விளக்குகளும் எரிந்து கொண்டிருக்க மக்கள் பெரும்
  ஆச்சரிய மானார்கள் .

  மேலும் பேசிய தெய்வம் அவ்வாலிபன் இங்குதான் பல்லாண்டுகள் தங்கி தவம் செய்தான் என கூறிய து.இதனால் வாலிபர் மீது பக்தி கொண்ட மக்கள் சென்று என்ன செய்வது கேட்டனர் .

  குருவும் நானும் வேறல்ல என்பதை உணர்ந்தவராய் அவரிடம் தனது குருவின் இடம்என்று கூறி அவ்விடத்தை முன்போல் மூடி விடுமாறு கூறினார். அ மக்களும் அப்படியே செய்தனர். இப்போது மக்கள் அவரை பக்தியோடு பார்க்க ஆரம்பித்தனர் .

  சீரடி யைச் சுற்றி சுற்றி வந்த வாலிபன் திடீரென காணவில்லை மக்கள் பதைபதைப்புடன் வாலிபனை தேடினர். அவர் சென்றுவரும் காடுகளுக்கும் தெரிந்த இடங்களுக்கும் சென்று தேடினர் எங்கு தேடியும் கிடைக்காததால் மக்கள் வருந்தினர்

  அதே நேரத்தில் கிராம அதிகாரியான சான் பாட்டீல் என்பவர் அருகிலுள்ள நகருக்கு செல்லும் போது களைப்பு தீர நிறுத்திய குதிரை காணாமல் போகவே தன் குதிரையை தேடிக் கொண்டிருந்தார்.

  அருகில் இருக்கும் அற்புதத்தின் பெருமை தெரியாமல் தேடும் மக்கள் போல் அருகே இருந்த போது ம் காணமுடியாமல் தேடிக்கொண்டிருந்தார் பாட்டில். மாயை எனும் திரை விலகினால் அனைத்தையும் அறிந்து விடலாம்.

  எழுத்து குச்சனூர் தி. கோவிந்தராஜன்

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,106FansLike
  369FollowersFollow
  46FollowersFollow
  74FollowersFollow
  1,756FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-